உலகின் அபூர்வமான 'மயில் சிலந்தி'.. பார்க்க தான் அழகா இருக்கும்.. கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதானாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Aug 09, 2022 08:55 PM

உலகின் மிகவும் அரியவகை சிலந்தி இனமாக கருதப்படும் மயில் சிலந்திகள் ஆந்திராவில் காணப்படுகின்றன.

Peacock tarantula the only species of its kind have blue hair

Also Read | குறைஞ்சபட்ச சம்பளமே ரூ.63 லட்சம்... "உழைக்கிறவங்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்கனும்".. அதிரவைத்த CEO.. யாரு சாமி இவரு..?

சிலந்திகள் என்றவுடன் வீட்டின் மூலை முடுக்குகளில் வலைபின்னும் சிறிய உயிரினம் தான் பலருக்கும் நியாபகம் வரும். ஆனால், சிலந்திகளில் ஏராளமான வகைகள் உள்ளன. அதேபோல பெரியவகை சிலந்திகள் டிராண்டுலா என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சிலந்திகள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல அமெரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றிற்கு உரோமங்கள் நீளமாக வளரும். இந்த சிலந்திகளில் சில குறிப்பிட்ட வகை இனங்கள் சிறிய பல்லிகள், தவளைகள் மற்றும் பறவைகளை உணவாக உட்கொள்ளும் அளவு வல்லமை படைத்தவை.

மயில் சிலந்திகள்

இந்த சிலந்திகளின் வடிவங்கள் மற்றும் வேட்டையாடும் திறன் ஒவ்வொரு இனத்துக்கும் மாறுபடும்.  அந்த வகையில் ஆந்திராவில் காணப்படும் மயில் சிலந்திகள் மிகவும் அரியவகை சிலந்திகள் ஆகும். சிலந்தி இனங்களிலேயே நீல நிற உரோமங்கள் இந்த மயில் சிலந்திகளுக்கு மட்டுமே காணப்படுகின்றன. இதுவே, பிற சிலந்திகளிடம் இருந்து இவற்றை வேறுபடுத்தி காட்டுகின்றன.

Peacock tarantula the only species of its kind have blue hair

மயில் சிலந்தி அல்லது Poecilotheria metallica என்று அழைக்கப்படும் இந்த வகை சிலந்திகள் மிகவும் பழைமை வாய்ந்த சிலந்தி இனமாகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இலையுதிர் காடுகள் இந்த இனத்தின் இயற்கையான வாழ்விடமாகும். துரதிர்ஷ்டவசமாக, இது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால் இவற்றின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துவருவதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆயுள்

மயில் சிலந்திகளில் உள்ள ஆண் இனங்கள் வயதாக ஆக அவற்றின் உடம்பில் உள்ள நீல நிறத்தின் அடர்த்தி குறையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த இனத்தில் பெண் சிலந்திகள் பொதுவாக 11 முதல் 12 ஆண்டுகள் வாழுமாம். அரிதாக சில பெண் சிலந்திகள் 15 ஆண்டுகள் வரை கூட வாழலாம் எனவும் ஆண் சிலந்திகள்  3 முதல் 4 ஆண்டுகள் வரை வாழும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Peacock tarantula the only species of its kind have blue hair

இந்த வகை சிலந்திகள் கடித்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் கடுமையான தலைவலி, உடல் வலி, வீக்கம் மற்றும் தசை பிடிப்புகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

Also Read | எவ்வளவு தண்ணீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணறு.. IIT நிபுணர்கள் கண்டறிந்த ஆச்சர்யம் அளிக்கும் உண்மை..!

Tags : #PEACOCK TARANTULA #SPECIES #BLUE HAIR #மயில் சிலந்தி

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Peacock tarantula the only species of its kind have blue hair | India News.