"ஆறு வருசமா LOVE பண்ணி, ஒண்ணா ஊர் சுத்துனோம், ஆனா".. காதலன் யாருன்னு தெரிஞ்ச உண்மை.. உடைந்து போன இளம்பெண்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 01, 2022 06:25 PM

இளம்பெண் ஒருவர் கடந்த 6 ஆண்டுகளாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை பற்றி தற்போது தெரிய வந்துள்ள தகவல், பேரதிர்ச்சியை அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளது.

woman dating with boyfriend for 6 years found he is her brother

Also Read | 6,500 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்த பெண்.. "உடம்பு முழுக்க தங்கம் வெச்சே புதைச்சு இருக்காங்க".. மெர்சல் ஆன மக்கள்

இது தொடர்பாக தனது பெயரை வெளியிடப்படாத பெண் ஒருவர், சமீபத்தில் தனது வாழ்வில் நடந்த விஷயத்தை Reddit தளத்தில் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சுமார் 30 வயதாகும் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலின் படி, அவர் 32 வயதாகும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அவர்கள் இருவரும் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்த குழந்தைகள் என்பதால், ஆரம்பத்தில், ஒருவருக்கு ஒருவர் அதிக நட்புடன் பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு மாறி மாறி அன்பு செலுத்தவும் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மாறி மாறி இருவரின் குடும்பங்களையும் அவர்கள் அறிமுகம் கொண்டு அன்பு செலுத்தி வந்துள்ளனர்.

சிறந்த காதல் ஜோடியாக அவர்கள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக வலம் வந்துள்ளனர். அப்படி இருக்கையில் தான், தன்னுடைய காதலன் குறித்து மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி, அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது. தான் ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதால், தனது குடும்பம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்த பெண் DNA பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது தான், கடந்த ஆறு ஆண்டுகளாக தான் காதலித்து வந்த வாலிபர், தன்னுடைய மூத்த சகோதரன் என்பது அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. மேலும், தனக்கு தெரிந்த இந்த தகவலை தன்னுடைய காதலனிடம் எப்படி சொல்வது என தெரியாமல் அவர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தனது பதிவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

woman dating with boyfriend for 6 years found he is her brother

முன்னதாக, அந்த பெண்ணையும் அவரது காதலனாக இருந்த வாலிபரையும் பார்க்கும் போது, பலரும் ஒரே போல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சகோதரன் என்ற உண்மையை தெரிந்த அந்த பெண், எப்படி அவருடன் மீண்டும் பழகுவது என்பது தெரியாமல் இருப்பதாகவும், DNA பரிசோதனையில் தவறு இருப்பதாக தான் நினைப்பதாகவும் கூறி உள்ளார்.

இதனால், மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். Reddit தளத்தில் அந்த பெண் பகிர்ந்த பதிவு, கடும் பரபரப்பை நெட்டிசன்கள் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது. இது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளில்.. திறக்கப்படாத வீட்டுக் கதவு.. "உள்ள போய் பாத்ததும்"... மணமக்களை பார்த்து அலறிய அக்கம் பக்கத்தினர்

Tags : #WOMAN #DATING #BOYFRIEND #BROTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman dating with boyfriend for 6 years found he is her brother | World News.