Tiruchitrambalam D Logo Top

INTERVIEW'ல பெண்ணிடம் கேட்கப்பட்ட ஒரு 'கேள்வி'.. இழப்பீடு வழங்கிய பிரபல பீட்சா நிறுவனம்!.. "அப்படி என்ன கேட்டாங்க?"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 22, 2022 03:32 PM

வேலைக்கான நேர்காணலில் பெண்ணிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்ட நிலையில், அதன் விளைவு அவருக்கு இழப்பீடு பெற்று தரவும் வைத்துள்ளது.

woman get 4 lakh compensation after age asked in interview

Also Read | 30 நிமிஷம்.. கடற்கரை வெயிலில் தூங்கிய பெண்.. "எந்திரிச்சு கண்ணாடி'ல மூஞ்ச பாத்ததுக்கு அப்புறம்".. ஒரு கணம் அப்படியே ஆடி போய்ட்டாங்க

வடக்கு அயர்லாந்து பகுதியை சேர்ந்தவர் Janice Walsh. இவர் சமீபத்தில், பிரபல பீட்சா உணவகம் ஒன்றின் ஓட்டுநர் வேலையின் நேர்காணலுக்காக அங்கே சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண் சென்றிருந்த வேலைக்கு ஏராளமான ஆண்கள் வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜானிஸிடம் நேர்காணல் நடத்தியவர்கள், அவரிடம் வயது என்ன என்பதை ஆரம்பத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், அந்த பீட்சா நிறுவனத்தின் டெலிவரி செய்யும் ஓட்டுநர் வேலைக்கு ஜானிஸ் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலை நிராகரிக்கப்பட்டதால், வயது காரணமாக தான் அப்படி நிகழ்ந்ததாக ஜானிஸ் நினைத்துள்ளார்.

woman get 4 lakh compensation after age asked in interview

இதனையடுத்து, ஜானிஸ் பேஸ்புக் வழியாக அந்த முன்னணி பீட்சா நிறுவனத்தில், தான் நேர்காணல் சென்ற கிளைக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். வயது பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும் ஜானிஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், ஜானிஸை நேர்காணல் செய்த நபர்களில் ஒருவர், அவரிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், நேர்காணலில் வயது கேட்பது தவறு என்பதை தான் உணரவில்லை என்றும் கூறி உள்ளார்.

இதன் பின்னர், அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரிடம் பேசிய போது, ஜானிஸ் விண்ணப்பித்த வேலைக்கு 18 முதல் 30 வயது வரையுள்ள நபர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அதே போல, தான் நேர்காணல் சென்ற அன்று நிறைய ஆண்கள் இருந்ததால், வயது மற்றும் பாலினம் காரணமாக தான், தனக்கு ஓட்டுநர் வேலை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன் என்றும் ஜானிஸ் முடிவு எடுத்துள்ளார்.

woman get 4 lakh compensation after age asked in interview

இதனைத் தொடர்ந்து, தனக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக உணர்ந்த ஜானிஸ், தனக்கு நேர்ந்த விஷயத்தை  வடக்கு அயர்லாந்திலுள்ள ஆணையத்திலும் புகார்அளித்துள்ளார். இதன் பின்னர், இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடைசியில் ஜானிஸுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு போடப்பட்டுள்ளது. இறுதியில், ஜானிஸுக்கு பிரபல பீட்சா நிறுவனம், 4,250 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் 4.3 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்கவும் செய்துள்ளது.

நேர்காணலில் கேட்கப்பட்ட ஒரே கேள்வியின் காரணமாக, பெண்ணுக்கு சுமார் 4 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்ட சம்பவம், இணையத்தில் அதிகம் பேசுபொருளாக மாறி உள்ளது.

Also Read | "ஆத்தாடி, ஒரு லிட்டர் தேள் விஷம் இம்புட்டு கோடியா?".. வியக்க வைக்கும் மவுசு.. 'பின்னணி' என்ன??

Tags : #WOMAN #COMPENSATION #INTERVIEW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman get 4 lakh compensation after age asked in interview | World News.