6,500 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்த பெண்.. "உடம்பு முழுக்க தங்கம் வெச்சே புதைச்சு இருக்காங்க".. மெர்சல் ஆன மக்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 01, 2022 05:07 PM

அவ்வபோது தொல்பொருள் ஆய்வாளர்கள் உலகின் பல இடங்களில் நடத்தி வரும் ஆய்வு முடிவுகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள விஷயங்கள் குறித்து ஏராளமான தகவலை எடுத்து சொல்லும்.

Rumenia gold rings buried in 6500 yr old woman grave

Also Read | "இத்தனை வருசமா இருந்தும் தெரியாம போச்சே".. சமையலறையின் தரையில் புதைக்கப்பட்டு இருந்த கிண்ணம்.. ஓப்பன் பண்ண தம்பதிக்கு செம 'ஷாக்'!!

அது மட்டுமில்லாமல், அந்த சமயத்தில் வாழ்ந்த மனிதர்கள் மற்றும் இடங்கள் குறித்தும் ஏராளாமான அரிய தகவல்களையும் அவர்கள் சேகரிப்பார்கள். இது மக்கள் மத்தியில், கடும் பிரம்மிப்பை உண்டு பண்ணும்.

அந்த வகையில், ருமேனியா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள பல ஆயிரம் ஆண்டுகள் மர்மம், கடும் ஆச்சரியத்தில் பலரையும் உறைய வைத்துள்ளது.

ருமேனியாவில் அமைந்துள்ள கல்லறை ஒன்றில், சுமார் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில், வியப்பை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால், அந்த பெண்ணின் உடலுடன் 169 தங்க மோதிரங்கள் மற்றும் வளையல்கள் உடன் கண்டுபிடிக்கப்பட்டது தான்.

Rumenia gold rings buried in 6500 yr old woman grave

அந்த பெண்ணின் உடல் தற்போது எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர் அடக்கம் செய்யப்பட்ட போது, உடன் இந்த நகைகளும் சேர்த்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா கூறி உள்ளார்.

அதே போல, எலும்புக்கூட்டின் அளவு உள்ளிட்ட பல விஷயங்களின் அடிப்படையில், இந்த உடல் எலும்புகள் ஒரு பெண்ணுடையது தான் என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அந்த பெண் உயரமாக இருந்துள்ளார் என்பதும், அவர் இறக்கும் போது பற்கள் நல்ல நிலையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் மிகுந்த செழிப்பான ஒரு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என்றும் கருதப்படுகிறது.

Rumenia gold rings buried in 6500 yr old woman grave

முன்னணி தொல்பொருள் ஆய்வாளரான கெலின் கெமிஸ், இதனை ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்றும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இப்படி ஒரு பொக்கிஷமே இல்லை என்றும் கூறி உள்ளார். கொடிகள் மதிப்புடைய பொக்கிஷங்களுடன் புதைக்கப்பட்ட பெண்ணை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான முயற்சியிலும் ஆய்வாளர்கள் இறங்கி உள்ளனர். இதற்காக, அந்த பெண்ணின் எலும்புகளும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சுமார் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண் இத்தனை தங்க ஆபரணங்களுடன் சேர்த்து புதைக்கப்பட்ட விஷயம், பலரையும் உச்சகட்ட பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இந்தியா கூட மேட்ச் முடிஞ்சதும்".. காதலி'ய பாக்க போன ஹாங்காங் வீரர்.. அடுத்தடுத்து நடந்த 'Lovely' சம்பவம்!!

Tags : #RUMENIA GOLD RINGS #OLD WOMAN GRAVE #BURY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rumenia gold rings buried in 6500 yr old woman grave | World News.