வழக்கமா லாட்டரி வாங்கும் பெண்.. இந்த முறை செய்த புது விஷயம்.!.. "அடுத்த சில நாள்லயே".. காலிங் பெல்லை அடித்த அதிர்ஷ்டம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளில், லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்ட பூர்வமாகவே செயல்பட்டு வருகிறது.

Also Read | "இப்டி உதவி பண்றது கூட ஒரு 'Vibe' தான்'ங்க".. மனம் உருகி போன இணையவாசிகள்.. லைக்குகளை அள்ளும் வீடியோ!!
அது மட்டுமில்லாமல், இந்த லாட்டரி டிக்கெட் வாங்கும் போது, பலருக்கும் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பரிசு தொகை அடிப்பதை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஏராளமான வெளிநாடுகளில் கூட சராசரி வாழ்க்கை வாழ்ந்து வரும் நபர்கள் பலரின் வாழ்க்கை, அப்படியே லாட்டரியில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் புரட்டி போடுவது தொடர்பாக நிறைய செய்திகளை நாம் கேட்டிருப்போம்.
அந்த வகையில், இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாழ்க்கையே மாறியது தொடர்பான செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த 44 வயதான Suzy Fenton என்பவர், லாட்டரி வாங்கும் வழக்கம் கொண்டவர். அவர் ஒவ்வொரு முறை லாட்டரி சீட்டை வாங்கும் போதும், ஒரு வழக்கமான எண்களைக் கொண்டு லாட்டரி எண்களை தேர்ந்தெடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்க சென்ற சூசி, இந்த முறை வழக்கமாக வாங்கும் எண்களை தேர்ந்தெடுக்காமல், புதிதாக ஒரு எண்ணை தேர்ந்தெடுத்து வாங்க முடிவு செய்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், கடைசி நேரத்தில் இப்படி ஒரு முடிவை சூசி எடுத்திருந்த நிலையில், தனக்கு பிடித்த நபரின் பிறந்த நாள் எண் கொண்ட லாட்டரி சீட்டு ஒன்றை அவர் வாங்கி உள்ளார். இத்தனை நாட்கள் வாங்கி வந்த எண்ணுக்கு, எந்த பரிசும் சூசிக்கு விழாத நிலையில், கடைசி நேரத்தில் அவர் மாற்றிய லாட்டரி எண்ணுக்கு அதிரடி பரிசு ஒன்றும் கிடைத்துள்ளது.
அதன் படி, அடுத்த ஒரு ஆண்டுக்கு மாதம் தோறும் சூசிக்கு 10,000 பவுண்டுகள் வீதம் பரிசாக வழங்கப்பட உள்ளது. பத்தாயிரம் பவுண்டுகள் என்பது, இந்திய மதிப்பில் சுமார் 9.4 லட்ச ரூபாய் வரை ஆகும். அப்படி அவருக்கு மொத்தம் 12 மாதம் பரிசு வழங்கப்பட உள்ளது.
மிகப் பெரிய பரிசு தொகை விழுந்த போதும், தனது வேலையை விடும் எண்ணம் எதுவும் இல்லை என சூசி தெரிவித்துள்ளார். தனது வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் உள்ளிட்டவற்றை அடைக்கவும், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது தோழிகள் இரண்டு பேரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதும் தான் சூசியின் ஆசையாக உள்ளது.
கடைசி நேரத்தில் மாறிய நம்பர் காரணமாக, அசாத்திய பரிசுத் தொகை, பெண் ஒருவருக்கு கிடைத்துள்ள செய்தி, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | மாத்திரை டப்பா வடிவில் 'திருமண' அழைப்பிதழ்.. "Expiry Date'ல இருந்த விஷயம் தான் அல்டிமேட்"!!

மற்ற செய்திகள்
