"இந்தியா கூட மேட்ச் முடிஞ்சதும்".. காதலி'ய பாக்க போன ஹாங்காங் வீரர்.. அடுத்தடுத்து நடந்த 'LOVELY' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Sep 01, 2022 03:53 PM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

hongkong player kinchitshah propose to girlfriend after india match

Also Read | "இத்தனை வருசமா இருந்தும் தெரியாம போச்சே".. சமையலறையின் தரையில் புதைக்கப்பட்டு இருந்த கிண்ணம்.. ஓப்பன் பண்ண தம்பதிக்கு செம 'ஷாக்'!!

மொத்தம் ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று (01.09.2022) நடைபெறும் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் காணும். மறுபக்கம், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

hongkong player kinchit shah propose to her girlfriend after india mat

முன்னதாக, நேற்று (31.08.2022) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதி இருந்த போட்டியில், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி அடைந்தது.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர், ஹாங்காங் வீரர் செய்த Proposal வீடியோ ஒன்று, இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

hongkong player kinchit shah propose to her girlfriend after india mat

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹாங்காங் வீரர் கிஞ்சித் ஷா, போட்டி முடிந்ததும் தனது காதலியிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண், தன்னால் இதனை நம்பவே முடியவில்லை எனக்கூறி, ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்றார். முழங்கால் போட்டு மறுபக்கம் கிஞ்சித் ஷா மோதிரத்துடன் காத்திருக்க, அவரது காதலையும் ஏற்றுக் கொண்டார் காதலி.

இறுதியில், காதலியின் விரலில் மோதிரம் போடவே, இருவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து தங்களின் காதலை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | கல்லூரி நண்பர்கள் ஒண்ணா தொடங்கிய பிசினஸ்.. "ஆறே வருசத்துல மட்டும் இத்தன கோடி லாபமா??".. மலைக்க வைத்த தொகை

Tags : #CRICKET #HONGKONG PLAYER #KINCHITSHAH #HONGKONG PLAYER KINCHITSHAH #PROPOSE #GIRLFRIEND #INDIA MATCH #KINCHIT SHAH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hongkong player kinchitshah propose to girlfriend after india match | Sports News.