ஒரே நேரத்துல 2 காதலிகள் கிட்டயும் வசமா சிக்குன வாலிபர்.. பரபரப்பான பஸ் ஸ்டாண்ட்.. இவ்வளவு பிரச்சனைல இந்த மனுஷன் செஞ்ச காரியம் இருக்கே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளிடமும் வசமாக சிக்கியிருக்கிறார் வாலிபர் ஒருவர்.

இரண்டு காதலிகள்
காதலில் இருக்கும் நபர்கள் தங்களது இணையை கவர பல வழிகளில் முயல்வதை பார்த்திருக்கிறோம். சர்ப்ரைஸாக பல திட்டங்களை யோசித்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்த துணிச்சலுடன் களத்தில் இறங்குபவர்களை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில சமயங்களில் இணையர் ஏற்படுத்தும் துரோகங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். அப்படி மகாராஷ்டிராவில் ஒரு இளைஞர் இரண்டு காதலிகளிடமும் ஒரே நேரத்தில் மாட்டிக்கொள்ள விஷயம் காவல்துறை வரை சென்றிருக்கிறது.
மகாராஷ்டிராவின் பைதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு இளம்பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இரு இளம்பெண்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்பதால் இளைஞர் இருவருடனும் பழகி வந்திருக்கிறார். ஆனால், பல நாள் திருட்டு ஒருநாள் வெளிப்படும் எனப் பழமொழி ஒன்று இருக்கிறதல்லவா? அப்படி இந்த ரகசியமும் சமீபத்தில் வெளியே வந்திருக்கிறது. வந்த இடம் பேருந்து நிலையம் என்பதால் பிரச்சனை பெரிதாகிவிட்டது.
காவல்துறைக்கு போன தகவல்
சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞர் தனது காதலியுடன் பைதான் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு அவருடைய இன்னொரு காதலியும் இருக்கவே விஷயம் விபரீதமாகிவிட்டது. இரு பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட அப்பகுதியே போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது. இதனையடுத்து இந்த விஷயம் உள்ளூர் காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமான அந்த இளைஞர் சந்தடி சாக்கில் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு இளம்பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு இருவருக்கும் ஆலோசனை கூறிய போலீசார் இதன்பின்னர் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என எச்சரித்து இரு இளம்பெண்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
