கட்டிலில் படுத்திருந்த பெண்.. முதுகுல இறங்கி படமெடுத்த நாகப்பாம்பு.. அந்த பெண் செஞ்சது தான்.. IFS ஆபிசர் பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகட்டிலில் படுத்திருந்த பெண்ணின் மீது பாம்பு ஒன்று படமெடுத்து நின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும். இதுவே, பாம்பு ஒருவருடைய உடல் மீது ஏறினால் சொல்லவே வேண்டாம். மிகப்பெரிய களேபரமே நடந்துவிடும்.. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு பெண் அவ்வாறு செய்யவில்லை. மிகவும் அமைதியாக அவர் பொறுமையுடன் பாம்பு கீழே இறங்கிச் செல்லும் வரை காத்திருக்கிறார். இந்த வீடியோ காண்போரை திகைக்க வைத்திருக்கிறது.
படமெடுத்த பாம்பு
கர்நாடக மாநிலத்தின் கல்புகர்க்கி அடுத்த மல்லபா கிராமத்தை சேர்ந்தவர் பங்கம்மா ஹனமந்தா. இவர் தனது வயலில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு களைப்பாக இருந்ததால் மரத்தடியில் இருந்த கட்டிலில் அயர்ந்து தூங்கியிருக்கிறார். அப்போது, அவரது முதுகில் ஏதோ இருப்பது போல அவர் உணர்ந்திருக்கிறார். அப்போது தான் தனது முதுகின் மீது பாம்பு படமெடுத்து நிற்பதை அவர் அறிந்திருக்கிறார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தாலும் மிகுந்த சாமர்த்தியமாக ஏதும் செய்யாமல் அப்படியே இருந்திருக்கிறார்.
வீடியோ
இதனைக்கண்ட அங்கிருந்த மக்கள் பாம்பை வீடியோ எடுத்திருக்கின்றனர். பாம்பு பல நிமிடங்களுக்கு அங்கிருந்து நகராமல் இருந்திருக்கிறது. இருப்பினும் பங்கம்மா, ஸ்ரீசைல மல்லையா என கண்களை மூடி கூறியபடி இருந்திருக்கிறார். இறுதியாக அந்த பாம்பு மெதுவாக கீழிறங்கி சென்றிருக்கிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா எனும் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், அந்த பதிவில்,"இதுபோல உங்களுக்கு நேர்ந்தால் உங்களுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஒரு தகவலை சொல்கிறேன். தங்களுக்கு ஆபத்துகள் இல்லை என பாம்புகள் உணரும்பட்சத்தில் இயல்பாக அவை அங்கிருந்து நகர்ந்துவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
When this happens, what would be your reaction??
For information, the snake moved away after few minutes without out causing any harm…
(As received from a colleague) pic.twitter.com/N9OHY3AFqA
— Susanta Nanda IFS (@susantananda3) August 28, 2022
Also Read | திருடிய கடையிலேயே பொருளை விற்ற பலே ஊழியர்.. எதார்த்தமா ரூமுக்குள்ள போனப்போ உரிமையாளருக்கு தெரியவந்த உண்மை..!

மற்ற செய்திகள்
