100 வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி.. வேகமா வந்து விலங்கு மாட்டிய போலீஸ்.. "இப்படி கூட ARREST பண்ணுவாங்களா??"
முகப்பு > செய்திகள் > உலகம்100 வயது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி ஒருவரை, போலீசார் கைது செய்த நிலையில், அதன் பின்னால் உள்ள காரணம், பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Also Read | "இத மட்டும் கோலி பண்ணிட்டா.. எல்லார் வாயையும் மூடிடலாம்".. ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் Jean Bickenton. இவர் முன்பு செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் தனது 100 ஆவது பிறந்தநாளை ஜீன் கொண்டாடி உள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திடீரென ஜீன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மத்தியில், சில போலீசார் உள்ளே நுழைந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், ஜீனை திடீரென அவர்கள் விலங்கு மாட்டி கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், இதன் உண்மைக் காரணம் மிகவும் வேடிக்கையான ஒன்று தான்.
100 வயதாகும் ஜீன், ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், ஜீனுக்கு சில Bucket list கூட இருந்துள்ளது. Bucket list என்பது, ஒரு நபர் தான் வாழ்நாளில் அடைய விரும்பும் அல்லது சாதிக்க விரும்பும் விஷயங்களின் பட்டியல் ஆகும். ஏதாவது வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பது, விளையாட்டில் சாகசத்தில் ஈடுபட வேண்டும் என பலரின் Bucket list குறித்த விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படி தான் ஜீனுக்கு, போலீசார் மூலம் கைது செய்யப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்துள்ளது. செவியிலியராக பணிபுரிந்த போதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், ஜீனுடைய விருப்பத்தை அவரது 100 ஆவது பிறந்தநாளில், மிகவும் வேடிக்கையான முறையில் விக்டோரியா போலீசார் நிறைவேற்றி உள்ளனர். இதனால் ஜீனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சில இளம் போலீசார் சைரன்களை அலறவிட்ட படி, மூதாட்டியின் வீட்டிற்கு வாகனத்தில் வந்துள்ளனர். மேலும், அங்கு வந்து அரை கைது செய்வது போல சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள். இது தொடர்பாக மூதாட்டி ஜீனுடன் போலீசார் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
மேலும் அந்த பதிவில், "ஜூனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது போலீசார் நுழைந்ததால் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை மேலும், ஜீனின் கையில் மெதுவாக கைவிலங்கிட்டு அவரது விருப்பத்துடன் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்" என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இது பற்றி பேசிய ஜீன், "இதுதான் என் சிறந்த பிறந்தநாள் ஆக அமைந்தது. அவர்கள் அனைவரும் என்னை மிகவும் மென்மையாக நடத்தினார்கள். மிக்க நன்றி" என கூறி உள்ளார்.