"ஓடுனா மட்டும் விட்டுடுவோமா?".. சாலையில் வாலிபரை துரத்திய இளம்பெண்.. "இப்படி பண்ணிட்டு போனா யாரு தான் துரத்த மாட்டாய்ங்க"
முகப்பு > செய்திகள் > இந்தியாபொது மக்கள் மத்தியில், சாலை ஓரம் இளம் பெண் ஒருவர், வாலிபரை துரத்தி பிடிப்பது தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இதற்கான காரணமும் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த வரலாறுகாணாத மழை.. வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்.. உறைந்துபோன உலக நாடுகள்..!
பீகாரின் மஹூலி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மெஹ்கர் கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே, திருமண நிச்சயம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தொடர்ந்து திருமணத்தை அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தள்ளி போட்டுக் கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், திருமண தேதியும் முடிவு செய்யப்படாமல், தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த அந்த வாலிபர், பெண்ணின் வீட்டாரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு பைக்கையும் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்தையும் வாங்கி கொண்டும் அந்த வாலிபர் திருமண தேதியை குறிக்க சம்மதிக்காமல் இழுத்துக் கொண்டே இருந்துள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், அந்த இளம்பெண் தனது பெற்றோர்களுடன் மார்கெட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அந்த வாலிபரை பார்த்த நிலையில், உடனடியாக அந்த இளம் பெண்ணும் நேராக அவரிடம் ஓடிச் சென்று அவரை பிடித்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் அங்கிருந்த மக்கள் மத்தியில் கடும் பரபரப்பை உண்டு பண்ணி இருந்த நிலையில், அந்த இளைஞர், இளம்பெண்ணின் பிடியில் சிக்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். அவரை விரட்டிய படி அந்த பெண்ணும் பின்னாலயே ஓடி உள்ளார். இதன் பின்னர், அப்பகுதியில் இருந்த மக்களின் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்த அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டிருக்கிறார். அப்போது தான் அந்த வாலிபர் வேண்டுமென்றே திருமணத்தை தள்ளிப் போட்ட விஷயமும் தெரிய வந்துள்ளது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, இருவரது குடும்பத்தினரையும் அங்கே அழைத்து அவர்களை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது..
மேலும், காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கோவில் ஒன்றில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இளைஞர் ஒருவரை இளம்பெண் சாலையில் துரத்தி செல்லும் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.