"இத்தனை வருசமா இருந்தும் தெரியாம போச்சே".. சமையலறையின் தரையில் புதைக்கப்பட்டு இருந்த கிண்ணம்.. ஓப்பன் பண்ண தம்பதிக்கு செம 'ஷாக்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 01, 2022 03:20 PM

இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவர், தங்களது வீட்டின் சமையலறையில் கிடைத்த சம்பவம் தொடர்பான செய்தி, பலரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

yorkshire couple make incredible discovery under kitchen floor

Also Read | காருக்குள் ஏறிய பாம்பு.. "பல நாள் தேடியும் கிடைக்காம கடைசி'ல"..உச்சகட்ட பதற்றத்தில் வாலிபர்!!.. "இவ்ளோ நாள் இதுகூடயா Travel பண்ணோம்"

தங்களின் பெயரை வெளியிட விரும்பாத தம்பதி, தங்கள் தங்கி வந்த வீட்டின் சமையலறையின் தரையை இடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில் தான், கடும் ஆச்சரியம் ஒன்று அவருக்கு காத்திருந்துள்ளது. அதன் படி, கிண்ணம் ஒன்றில் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டு புதைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

அந்த நாணயங்கள் 400 ஆண்டுகள் வரை பழமையானது என கூறப்படும் நிலையில், 18 ஆம் நூற்றாண்டில் கட்டுமானம் முடிக்கப்பட்ட வீடு அது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக அந்த தம்பதி இந்த வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், தரையில் இருந்து சுமார் 6 அங்குலம் ஆழத்தில் கிடைத்த தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

yorkshire couple make incredible discovery under kitchen floor

பத்து ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் வாழ்ந்து வரும் தம்பதி, சமையலறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏதோ மின்சார கேபிள் இருப்பது போல உணர்ந்துள்ளனர். இறுதியில், பணி நடந்த போது தரையை திறந்து பார்த்த போது தான், தங்க நாணயம் கொண்ட புதையல் இருப்பதை அறிந்துள்ளனர்.

1610 முதல் 1727 காலகட்டத்தை சேர்ந்த தங்க நாணயங்கள் என தகவல் தெரிவிக்கும் நிலையில், அந்த காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. மொத்தமாக 264 தங்க நாணயங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 2019 ஆம் ஆண்டே இந்த தங்க நாணயங்களை அந்த தம்பதியினர் மீட்டுள்ளனர்.

yorkshire couple make incredible discovery under kitchen floor

ஆனால், தற்போது தான் இந்த தகவலை அந்த தம்பதி உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் பின்னர், கிடைத்த தங்க நாணயங்களை ஏலத்தில் விடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 264 தங்க நாணயங்களுக்கு 2,50,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) வரை அவர்களுக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை ஆண்டுகள் சமைத்து வந்த இடத்தில் தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டு இருந்த தகவல், அந்த தம்பதியை மட்டுமில்லாமல் விஷயத்தை கேள்விப்படும் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | கல்லூரி நண்பர்கள் ஒண்ணா தொடங்கிய பிசினஸ்.. "ஆறே வருசத்துல மட்டும் இத்தன கோடி லாபமா??".. மலைக்க வைத்த தொகை

Tags : #YORKSHIRE COUPLE #DISCOVERY #KITCHEN FLOOR

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yorkshire couple make incredible discovery under kitchen floor | World News.