'பாஸ் கிரிக்கெட்ட ஒழுங்கா ஆடுங்க'...'அப்புறமா சந்திரயான் பத்தி பேசலாம்'...ஓட விட்ட நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 07, 2019 12:01 PM

'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Indians slam Pak Science Minister for mocking ISRO

இதையடுத்து விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய பிரதமர் மோடி அவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். நாடு முழுவதும் உங்கள் பின்னல் இருக்கிறது, முயற்சியை கைவிடால் தொடர்ந்து முன்னேறுங்கள் என தைரியம் ஊட்டினார். இதையடுத்து தனது உரையை முடித்து கொண்டு மோடி கிளப்பும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கதறி அழுதார். அவரை தேற்றிய பிரதமர் அவருக்கு தைரியம் ஊட்டினார்..இந்த வீடியோ பலரையும் நெகிழ செய்தது.

இந்நிலையில்  ட்விட்டரில் #INDIAFAILED என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானியர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபகத் உசைன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசைனை ட்ரோல் செய்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

இதனிடையே மறுபடியும் ட்வீட் செய்த உசைன் “ சந்திரயான் - 2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சிரியமாக உள்ளது” என்று பதிவிட்டு 'இந்தியா தோற்றுவிட்டது' என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார். இதற்கும் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள், முதலில் கிரிக்கெட்டை ஓழுங்காக ஆடுங்கள், அதற்கு பிறகு அறிவியல் குறித்து யோசிக்கலாம் என கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #PAKISTAN #CRICKET #CHANDRAYAAN #ISRO #CH FAWAD HUSSAIN #VIKRAM LANDER #ISRO CHIEF K SIVAN