' மனைவி நான் இருக்கேன், உனக்கு இன்னொரு பொண்ணா'... 'ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்'... 'இப்படி அவசரப்பட்டியே மா'... அது வேற யாரும் இல்ல, கணவன் உடைத்த ரகசியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது கணவரின் மொபைல் போனில் இருந்த வீடியோ ஒன்றைக் கண்டு கொதித்தெழுந்த மனைவி, தனது கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பிறகு தெரிய வந்த உண்மை காரணம், மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்தவர் ஜுயன் (Juan). இவரது மனைவி பெயர் லியோனோரா (Leonora). இந்நிலையில், லியோனோரா தனது கணவரின் மொபைல் போனில் அவர் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களையும், உடலுறவு கொள்ளும் வீடியோக்களையும் கண்டு அதிர்ந்து போயுள்ளார். உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற லியோனோரா, இதுகுறித்து ஜுயனை ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காமல், அவரின் கால் மற்றும் கை பகுதிகளில் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியுள்ளார்.
ஜுயனின் மொபைல் போனில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ குறித்து பேசியே இந்த செயலில் லியோனோரா ஈடுபட்ட நிலையில், அப்போது வலியால் துடித்த ஜுயன், ஒரு வழியாக தனது மனைவியின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி எந்த புகைப்படத்தை பற்றி நீ பேசுகிறாய் என கேட்ட போது தான் மிகப் பெரிய உண்மை தெரிய வந்துள்ளது.
அந்த பெண் வேறு யாருமில்லை, நீ தான் என ஜுயன் தெரிவித்த நிலையில், கணவரின் பதிலைக் கேட்டு லியோனோரா ஆடிப் போயுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஜுயன் மற்றும் லியோனோராவின் இளமைக் காலத்தில் டேட்டிங் சென்ற போது எடுக்கப்பட்டதாகும். தான் மிகவும் இளமையாகவும், தற்போது இருப்பதை விட ஒல்லியாகவும் இருந்ததால் லியோனோராவால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
இவர்களின் வீட்டிற்குள் கூச்சல் மற்றும் அலறல் சத்தம் கேட்டுள்ள நிலையில், அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். லியோனோராவை கைது செய்துள்ள போலீசார், அவரை ஜெயிலில் அடைத்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் பழைய இ மெயில் ஒன்றின் மூலம் தனக்கு கிடைத்ததால் அதனை மொபைலில் சேமித்து வைத்ததாக ஜுயன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் அதிக முறை கத்திக்குத்து காயங்கள் பட்டுள்ளதால் ஜுயனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
