‘100 மில்லியன் டாலர் பறிபோகும்’.. ஆனாலும் மனைவிக்காக ‘அதிரடி’ முடிவெடுத்த ‘வைரல்’ ஆன்லைன் நிறுவன ஜாம்பவான்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் பல நாடுகளில் இன்னமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடி கொண்டிருக்கும் நிலையில் மனைவிக்காக ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் ஒருவர் தன் வேலையை விடும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெர்மன் ஆன்லைன் ஃபேஷன் வர்த்தக ஜாம்பவானான Rubin Ritter என்பவர் Zalando எனும் நிறுவனத்தின் இணை தலைமை அலுவலராக இருப்பவர். இவர் தன் மனைவியின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக தனது வேலையை அடுத்த ஆண்டு ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார்.
அடுத்த வருடம் மே மாதம் நிறுவனத்தின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தின்போது, தன் வேலையை ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்துள்ள Rubin Ritter தன் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் ஆண் பெண் வருவாயில் பெருமளவு பாகுபாடு உள்ள நாடுகளில் ஜெர்மன் முக்கியமான நாடு என்கிற நிலையில் ஆண்களை விட பெண்களில் 20 சதவீதம் குறைந்த ஊதியம் பெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் ஜெர்மனியில் பல பெண்கள் பகுதி நேர வேலை செய்வது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Rubin Ritter இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ஜெர்மனியில் இருந்த ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
