ஆண் நண்பருடன் ‘மனைவி’ தலைமறைவு.. வாடகைக்கு குடி வைத்ததால் வந்த வினை.. கணவர் கொடுத்த புகாரால் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடி கணவரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோட்டை குமார். ஜேசிபி ஆபரேட்டரான இவர், கோவை பாப்பம்பட்டியில் பிரபு என்பவரின் வீட்டில் வாடகை தங்கியுள்ளார். அப்போது பிரபுவின் மனைவி் பத்மஸ்ரீக்கும், கோட்டை குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி வெளியூரில் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி பிரபு வெளியே சென்றிருந்த நிலையில், அவரது தாயாரும், மனைவி பத்மஸ்ரீயும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் பிரபுவின் தாயை மிரட்டி பத்மஸ்ரீயை கடத்தி சென்றுள்ளார். பின்னர் பிரபுவுக்கு போன் செய்து, ‘ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் உன் மனைவியை விட்டு விடுகிறேன். இல்லையென்றால் மும்பையிலோ, பெங்களூரிலோ பணத்துக்கு விற்றுவிடுவேன்’ என அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயை கடத்தியது கோட்டை குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பத்மஸ்ரீ அவ்வப்போது தலைமறைவாகி கோட்டை குமாருடன் சுற்றி வந்துள்ளார். அப்போது பிரபுவை மிரட்டி பணம் பறிப்பது, பின்னர் மனைவியை விட்டு விடுவதுமாக இருந்துள்ளார். இந்த கடத்தல் நாடகத்துக்கு பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி மீதுள்ள அதீத அன்பாலும், வெளியே தெரிந்தால் கௌவரம் போய்விடும் என்ற பயத்தாலும் பிரபு போலீஸில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். இதேபோல் 3 முறை சத்தமில்லாமல் பணத்தைக் கொடுத்து கோட்டை குமாரிடமிருந்து மனைவியை மீட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அதேபோல் கடத்தல் நாடகம் அரங்கேறியதால் பொறுமை இழந்த பிரபு சூலூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கோட்டை குமார், பத்மஸ்ரீயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
