ஓட்டு எண்ணிக்கை ‘பரபரப்பா’ நடந்துகிட்டு இருக்கு.. ஆனா அமெரிக்க மக்கள் எதை ‘கூகுள்ல’ அதிகமா தேடியிருக்காங்க பாருங்க.. ‘வியக்க’ வைத்த ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
நவம்பர் 3ம தேதி மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.இதனால் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகள் தெரிந்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில், ஓட்டு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், அமெரிக்காவில் இன்று கூகுள் தேடலில் முதலிடம் வகித்த வார்த்தை எது என்று பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அதனால் மது பானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக ‘என் அருகில் உள்ள மதுக்கடைகள்’ (Liquor stores near me) என்ற வார்த்தை கூகுள் தேடலில் இன்று முதலிடம் வகித்ததாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
