'அவர்' எத்தனை தடைகளை கடந்து 'இந்த' இடத்துக்கு வந்துள்ளார் தெரியுமா!?.. 'அவரின் கதை தான் அமெரிக்காவின் கதை'!.. கமலா ஹாரிஸ் குறித்து ஜோ பிடன் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 21, 2020 03:41 PM

அமெரிக்காவின் கதைதான் கமலா ஹாரிஸின் கதை. தான் சந்தித்த பல்வேறு தடைகளை தகர்த்து, அமெரி்க்காவின் வலிமையான குரலாக கமலா ஹாரிஸ் ஒலிக்கிறார் என்று அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

joe biden praises indian origin kamala harris nomination speech

அமெரி்க்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் நேற்று அறிவிக்கப்பட்டார், அதை ஜோ பிடனும் ஏற்றுக்கொண்டு அறிமுக நிகழ்சியில் பேசினார். அப்போது துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு புகழாரம் சூட்டினார்.

ஜோ பிடன் நிகழ்ச்சியில் பேசியதாவது:

அமெரிக்க மக்கள் ஒவ்வொருவருக்கும் அளித்த வாக்குறுதியை அடுத்து வரும் அதிபர் நிச்சயம் நிறைவேற்றுவார். நான் மட்டும் இந்த வாக்குறுதிகளை தனியாக நிறைவேற்றப்போவதில்லை, என்னுடன் மிகச்சிறந்த துணை அதிபர் வேட்பாளரும் இருக்கிறார்.

பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் கமலா ஹாரிஸ். தாய் இந்தியப்பூர்வீகம், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். தன்னுடைய வாழ்வில் கமலா ஹாரிஸ் தான் எதிர்கொண்ட பல்வேறு தடைகளை தகர்த்து முன்னேறி இந்த இடத்துக்கு வந்துள்ளார்.

கமலா ஹாரிஸின் கதைதான் அமெரிக்காவின் கதை. நம்முடைய நாட்டில் இருக்கும் பல்வேறு தடைகளை எவ்வாறு தகர்ப்பது என்பது குறித்து அவர் நன்கு அறிவார். பெண்கள், கறுப்பினப் பெண்கள், கறுப்பின அமெரிக்கர்கள், தெற்காசியாவைச் சேர்ந்த அமெரிக்கர்கள், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரின் குரலாக கமலா ஹாரி்ஸ் ஒலிக்கிறார். தான் சந்தித்த ஒவ்வொரு தடையையும் தகர்த்துள்ளார்.

பணக்காரர்களுக்கு இடையேயும், துப்பாக்கிக் கலாச்சார்த்தையும் அவர் சந்தித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது இருக்கும் நிர்வாகத்தை தீவிரவாதத்துக்கு ஒப்பாக சொல்வதிலும், சட்டத்தைப் பின்பற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது எனச் சொல்வதிலும் எந்தவிதமான கடினமான நிலையும் இல்லை.

அமெரி்க்காவில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் வலிமையான குரலுடையவராக கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். சமத்துவமின்மை, அநீதி போன்றவை அதிகரித்து வரும் சூழலில் அதற்கு எதிராக கமலா ஹாரிஸ் குரல் கொடுக்கிறார். பொருளாதார அநீதி, இனஅநீதி, சுற்றுச்சூழல் அநீதி ஆகியவற்றுக்கு எதிரான குரலாக அவர் இருக்கிறார்.

நான் அவர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன், நீங்களும் கவனித்தால், பாதிகப்பட்டவர்களின் குரலைக் கேட்கலாம். காலநிலை மாறுபாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா, பள்ளிக்குச் சென்றால் துப்பாக்கிச் சூடு நடக்குமா, முதல்முறையாக பணிக்குச் செல்லலாமா போன்ற அச்சம் இருக்கிறது. அமெரிக்கா ஒவ்வொருவருக்குமானது என்பதை அடையாளப்படுத்துவது அடுத்த அதிபரின் பணியாக இருக்கும்.

இவ்வாறு ஜோ பிடன் தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Joe biden praises indian origin kamala harris nomination speech | World News.