“செம்ம ஃபார்மில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்!”.. பின்ன சும்மாவா? பூர்வீகம் தமிழ்நாடாச்சா!!.. ஆச்சர்யத் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 13, 2020 07:52 PM

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.

Vice presidential pick Kamala Harris comes from tamilnadu origin

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு 55 வயதான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இவர் ஒரு இந்திய வம்சாவளி பெண்மணி என்பதுடன் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கிராமம்தான் இவரது பூர்வீகம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவரது தாய் வழி தாத்தா கோபாலன்,  பாட்டி ராஜன் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஸ்டெனோகிராஃபராக வாழ்க்கையைத் தொடங்கிய கோபாலன் ஆங்கிலேய அரசாங்க காலத்தில் சிவில் சர்வீஸில் பணியாற்றியவர். 1930-ஆம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்துவந்த அகதிகளை கணக்கெடுப்பதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கோபாலன் பின்னர் அமெரிக்காவில் குடியேற, இவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுள், சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ்.

 

சட்டப் படிப்பு பயின்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று சான்பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். இவரது கணவர் டக்ளஸ். கடந்த 2019 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் எழுதிய ட்ரூஸ் வீ ஹோல்டு (Trues We Hold) என்கிற புத்தகத்தில் தனது தாத்தா குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதோடு தனக்கு ஊக்கசக்தியாக தாத்தா திகழ்வதாகவும், 1991 ஆம் ஆண்டு சென்னையில் தனது தாத்தா கோபாலனுக்கு 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது சென்னை வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன்முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுவதும், அவர் தமிழ்நாட்டில் தங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி என்பதும் தங்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாக இருப்பதாகவும் பைங்காநாடு கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vice presidential pick Kamala Harris comes from tamilnadu origin | World News.