“கொரோனா உயிரிழப்பு தகவல்” மற்றும் “புவி வெப்பம் அடைதல்”.. இரண்டு விவகாரங்களில் இந்தியாவை கடுமையாக ‘சாடிய’ டிரம்ப்!.. அப்படி என்ன சொன்னார்?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 74 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு இதுவரை ஆளாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துமுள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், “கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பரவல் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாக முன்னெடுக்கவில்லை. இதனால் உலக அளவில் கொரோனா தொற்றில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. மீண்டும் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்த்து உலக நாடுகள் சிரிப்பதற்கு இதுவே வாய்ப்பாக இருக்கும்”' என விமர்சித்துள்ளார்.
இதற்கு கோவப்பட்டு பதில் அளித்த அதிபர் டிரம்ப், “சீனாவில் கொரோனாவுக்கு இறந்தவர்கள் எத்தனை பேர் என்றும் ரஷ்யாவிலும், இந்தியாவிலும் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்றும் உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் இந்த நாடுகள் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி உண்மையான தகவல்களை உலகிற்கு அறிவிக்கவில்லை” என கூறினார்.
இதேபோல் உலகில் புவி வெப்பமடைதலில் 15 சதவீதத்துக்குதான் அமெரிக்கதான் பொறுப்பு என்று ஜோ பிடன் கூறினார். ஆனால் இதற்கும் பதில் அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் புவி வெப்பமடைதலுக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன் காற்று மாசுபடுவதில் இந்தியாவின் பங்கு அதிகம் என்றும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
