‘வாயை மூடு மேன்’!.. டிரம்பை அதிரவைத்த ஜோ பிடன்.. ‘அனல்’ பறந்த விவாதத்தில் நடந்தது என்ன..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு பகுதியான டிரம்ப் மற்றும் ஜோ பிடன் நேரடி விவாவதம் நடைபெற்றது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் போட்டியிடுகிறார். இறுதிக்கட்ட பிரச்சாரமாக இரு வேட்பாளர்களும் நேருக்குநேர் விவாதத்தில் பங்கேற்றனர்.
ஓஹியோ மாநிலம் கிளீவ்லேண்டில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9:30 மணிக்கு தொடங்கிய்து. இருவருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி விவாதத்துக்கு மொத்தம் 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய டிரம்ப், ஜோ பிடன் தனியார் காப்பீட்டை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால் இதனை ஜோ பிடன் மறுத்தார்.
இதனை அடுத்து பேசிய ஜோ பிடன், கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது டிரம்ப் மிகப்பெரிய பேரணியை ஏன் நடத்தினார்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நான் சொல்வதை மக்கள் கேட்க விரும்புவதால் பேரணியை நடத்தியதாக கூறினார். மார்ச் மாத இடையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்ததில் இருந்து டிரம்ப் 21 பிரச்சார பேரணிகளை நடத்தியுள்ளார். அந்த பேரணிகளின் போது ஆதரவாளர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணியவில்லை, சமூக விலகலையும் கடைபிடிக்கவில்லை. இதனால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என டிரம்ப் பதிலளித்துள்ளார் என்று ஜோ பிடன் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ஜோ பிடன், டிரம்பை முற்றிலும் பொறுப்பற்றவர் என விமர்ச்சித்தார். மேலும், நோய் பரவலை தடுப்பதில் டிரம்புக்கு அக்கறை இல்லை என கடுமையாக சாடினார். அப்போது குறிக்கிட்ட டிரம்ப், ‘உங்களால் கூட்டத்தை கூட்ட முடிந்தால் நீங்களும் அதையேதான் செய்திருப்பீர்கள். ஆனால் உங்களால் அது முடியாது. அப்படி கூட்டத்தை கூட்ட யாராலும் முடியாது’ என பதிலளித்தார்.
இதனையடுத்து ஜோ பிடன் பேசும் போது, அவரை பேச விடாமல் டிரம்ப் தொடர்ந்து குறுக்கிட்டார். இதனால் பொறுமை இழந்த ஜோ பிடன், ‘வாயை மூடு மேன்’ (Will You Shut Up Man) என டிரம்ப்பை நோக்கி கேட்டு அதிர வைத்தார்.

மற்ற செய்திகள்
