“இதுதான் என் மகன்..! இல்ல.. இல்ல பேத்தி!”.. ‘இரண்டுமே தப்பு! இப்படி உளறுபவர் கொஞ்ச நேரத்துல அமெரிக்க அதிபரா கூட ஆகலாம்!’ - ‘கலாய்த்த’ டெய்லி மெயில்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு யாருக்கு என்கிற விவாதங்கள் அதைவிட சூடு பிடித்துள்ளன.

இதனிடையே முதுமை காரணமாக ஜோ பைடன் பேசும்போது தடுமாறுவது தொடர்பான கட்டுரை டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. முதுமை காரணமாக தான் அவர் உளறுகிறார் என்றாலும் சில நேரங்களில் அவர் செய்யும் சொதப்பல்களை வீடியோவாக எடுத்து ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அப்படி நேற்று ஜோ பைடன் செய்த ஒரு சொதப்பல் வீடியோ டெய்லி மெயில் உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியானது. அதில் ஜோ பைடன் அருகில் இருக்கும் ஒரு இளம் பெண்ணை காட்டி இதுதான் என்னுடைய மகன் Beau Biden என்று கூறி அறிமுகம் செய்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அருகில் நின்றது ஜோவின் மகன் அல்ல. ஜோ பைடனின் மகன் Beau Biden, 2005 ஆம் ஆண்டே இறந்து போய்விட்டார். ஒருவேளை அருகில் இருக்கும் அந்த இளம் பெண்ணை காட்டி இவர்தான் என் மகள் என்று சொல்வதற்கு பதிலாக மகன் என்று சொல்லிவிட்டாரோ என்று பார்த்தால் அந்த பெண், ஜோவின் மகளும் இல்லை.உடனே சுதாரித்த அவர், ‘இல்லை இல்லை.. இது எனது பேத்தி Natalie biden’ என்றார். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், அந்த பெண் அவருடைய பேத்தி Natalie-யும் அல்ல. அது ஜோ பைடனின் இன்னொரு மகனான Hunter biden-ன் மகள் Finnegan Biden(20).
கடைசியாக ஒரு வழியாக பொறுங்கள் என்று சொல்லிவிட்டு தப்பான ஆளை காட்டி விட்டதாக சற்று வருத்தமடைந்தார். இதேபோல் தேர்தல் பிரச்சாரத்தின் போது பலமுறை உளறிக் கொட்டியுள்ளார் ஜோ. இந்த வீடியோவை குறிப்பிட்டு, ஒரு பெண்ணை காட்டி, இவர் தான் என்னுடைய மகன் என்று தவறாக அடையாளம் காட்டிய இவர் இன்னும் சில மணி நேரத்தில் உங்களுக்கு அதிபராக கூட ஆகலாம் என்று டெய்லி மெயில் பத்திரிக்கை கிண்டல் செய்து, செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
