அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடிய கேரள வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி, மூன்றாவது முறையாக கால்பந்து கோப்பையை கைப்பற்றி உள்ளது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றி உள்ளதால் இதனை உலகெங்கிலும் உள்ள அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
![kerala argentina fan collpased after their victory in fifa world cup kerala argentina fan collpased after their victory in fifa world cup](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/kerala-argentina-fan-collpased-after-their-victory-in-fifa-world-cup.jpg)
Also Read | "நடிகை, திருநங்கை, மாடல்".. எம்பாப்பேயின் காதல் பக்கங்கள்??.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கத்தாரில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தன.
இந்த போட்டி முழுக்க முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்ததால் உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் போய்ட்டியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து கொண்டிருந்தனர். இரு அணிகளும் 3 - 3 என்ற கணக்கில் போட்டியை சமன் செய்ததையடுத்து பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு நடந்தது. இதில், அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றி சென்றது.
இதன் காரணமாக, ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா அணியையும், மெஸ்ஸியையும் பாராட்டி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், கேரள மாநிலம் கொல்லம் நகரில் அமைந்துள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டிக்கான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அங்கே அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து போட்டிகளை திரையில் கண்டு களித்துள்ளனர். அப்போது, அக்ஷய் என்ற இளைஞரும் அங்கே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. அந்த சமயத்தில், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதையும் அக்ஷய் கொண்டாடி உள்ளார்.
இந்த நிலையில் தான், கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அக்ஷய் திடீரென மயங்கி சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைய, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர். இருந்த போதும் அக்ஷயின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றது.
கால்பந்து உலக கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த வாலிபர், திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read | "தினமும் இரவில் ஊசி போடணும், இல்லன்னா".. கால்பந்து ராஜா மெஸ்ஸியின் வலி நிறைந்த நிஜ கதை!?
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)