'கொரோனா இருக்கா...? இல்லையா...?' 'தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் போதும்...' 'ஒரு நாளைக்கு 15,000 சோதனை கருவிகளைத் தயாரிக்க முடியும்...' புதிய மருத்துவ கிட்டை உருவாக்கிய நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 24, 2020 07:24 PM

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா வைரஸை கண்டுபிடிக்க புதிய மருத்துவ கிட்டைபுனேவைச் சேர்ந்த மைலாப்ஸ் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Researchers are discovering a new medical kit to detect corona

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசால் இதுவரை 3,92,407  பேர் பாதித்துள்ளனர் மேலும் உலகெங்கிலும் 17,148 மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் விகிதம் தற்போது சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை அடுத்து இடம் பெரும் நாடு இந்தியா. தற்போது இந்தியாவில் இதுவரை 522 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

மேலும் தற்போது இந்தியா முதன் முதலில் வேகமாக   கோவிட் -19 பாதிப்பு உள்ள நோயாளிகளை கண்டறிய  புனேவை சார்ந்த Mylabs Discovery Solutions என்ற நிறுவனம் 'Mylab PathoDetect COVID-19 Qualitative PCR kit என்னும் மருத்துவ கிட்டை உருவாக்கியுள்ளது.  மேலும் தற்போது பரிசோதனைக்கு பயன்படும் கருவி எடுத்துக்கொள்ளும் நேரத்தை இதன் மூலம் பாதியாகக் குறைக்கலாம்

இந்நிலையில் 'Mylab PathoDetect COVID-19 Qualitative PCR kit' பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளது. மேலும் புனே மாவட்டத்தின் லோனாவாலாவில் உள்ள மூலக்கூறு கண்டறியும் நிறுவனம் மூலம் ஒரு நாளைக்கு 15,000 சோதனை கருவிகளைத் தயாரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 25,000 வரை கூட அதிகாரிக்க இயலும் என அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீகாந்த் படோல் பி.டி.ஐ யிடம் கூறினார்.

மேலும் தற்போது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸை கண்டுபிடிக்க பயன்படுத்தும் கருவியின் நேரத்தை 'மைலாப் பாத்தோடெக்ட் கோவிட் -19 குவாலிட்டேடிவ் பி.சி.ஆர் கிட்' பயன்படுத்தி சோதனை நேரத்தை 2.5 மணி நேரமாகக் குறைக்க முடியும் என்றும்  தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கிய நிலையில் 25 விஞ்ஞானிகள் கொண்ட குழு கடந்த ஆறு  வாரங்களுக்கு முன்பே இதற்கான பணிகளை செய்ய தொடங்கினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'Mylab PathoDetect COVID-19 Qualitative PCR kit' aஆனது ஸ்கிரீனிங் மற்றும் கொரோனா உள்ளதை உறுதிபடுத்தும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) ஆகியவற்றின் ஒப்புதல்களின் பின்னரே அனுமதி பெறப்பட்டது என்பதும்

Tags : #CORONAVIRUS #MEDICALKIT