இன்னும் இந்த ‘வருஷம்’ என்னவெல்லாம் பார்க்க போறோமோ.. மரப்பொந்தில் இருந்து வெளியே வந்த ‘விஷ வண்டு’ கூட்டம்.. வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண வேளாண் துறையினர் விஷ வண்டுகளை அழிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் நாட்டின் முதல் விஷ வண்டுகளை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அவற்றை ‘கொலைகார வண்டுகள்’ என அழைத்தனர். கனடா எல்லைப் பகுதியில் உள்ள பிளைய்னே என்ற ஊரில் உள்ள மரப்பொந்தில் அந்த விஷவண்டு கூட்டை பூச்சியியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
அங்கு பல விஷ வண்டுகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூச்சியியல் நிபுணர்கள், அவற்றை முற்றிலும் அழிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மோசமான பருவநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வண்டுகள் அழிக்கும் பணி தடைபட்டது.
இந்த விஷவண்டுகள் குறித்து தெரிவித்த வாஷிங்கடன் வேளாண்துறை ஆய்வாளர்கள், ‘ஆசிய விஷ வண்டுக்ள் அமெரிக்காவில் உருவானவை அல்ல. அவை வெளியில் இருந்து வந்தவை. உலகின் மிகப்பெரிய விஷ வண்டுகளாக இவை உள்ளன. சில வண்டுகள் சேர்ந்து மிகச்சில மணிநேரங்களில் தேனீக்கள் கூட்டத்தையே அழித்துவிடும் அளவுக்கு ஆபத்தானவை’ என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விஷ வண்டுகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்து இல்லை என்றாலும், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என வேளாண்துறை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
