ரகசிய மீட்டிங்!.. அவசர ஆலோசனை!.. அமெரிக்க தேர்தல் வேற நெருங்குது... கிம் வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான மத்தியக் குழு, கொரிய புரட்சி மற்றும் கட்சியின் கட்டமைப்புகள் குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் பிற நாடுகளைப் போலவே, வடகொரியாவிலும் கடுமையான பொருதாளார சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வட கொரியாவின் 'மத்திய கொரியன் செய்தி நிறுவனம்' வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வடகொரியாவில் புரட்சிகரமான மாற்றங்கள் மற்றும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகளுடன், அதிபர் கிம் முக்கிய ஆலோசனை நடத்துவார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவில், அதிபர் கிம், தற்போது வடகொரியாவில் பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவந்ததாலும், அபாயகரமான அணு ஆயுதக் கொள்கைகளாலும், வடகொரியா ஏராளமான பொருளாதாரத் தடைகளை அனுபவித்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தற்போது வடகொரியாவிற்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, சில வாரங்களுக்கு முன், வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் நாசமாகின. மேலும், குடிமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவிருக்கிறது. அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், அமெரிக்காவை மிரட்டும் தனது பாணியை மாற்றிக்கொள்ள விரும்பாத கிம், தன்னுடைய கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளார்.
இதன் காரணமாக, அதிகாரிகளை மாற்றுதல், பொருளாதாரத்தை மீட்டெடுக்க லாக்டவுன் தளர்வுகளை வெளியிடுதல் எனத் தீவிரமாக இயங்கிவருகிறார் கிம்.

மற்ற செய்திகள்
