அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள்... அனல் பறக்கும் விவாதம்... வெளுத்து வாங்கிய கமலா ஹாரிஸ்!.. தேர்தல் கள நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே இன்று நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஏற்கனவே அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர். இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே இன்று நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதம் நபாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மைக் பென்ஸ் கூறியதாவது:-
கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம். அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா உயிரிழப்புகளை குறைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பே டிரம்புக்கு முதன்மையானது. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் வரிச்சலுகைகளை பறித்து விடுவார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட கமலா ஹாரீஸ் பதிலளிக்கும்போது கூறியதாவது:-
டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான செயல்திட்டம் இல்லை. அதிபர் டிரம்பின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். கொரோனாவிற்கு நாடு முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.

மற்ற செய்திகள்
