"எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சுனு நினைக்கிறீங்க?.. அழகான பெண்களை முத்தமிடுவேன்!".. தேர்தல் பிரசாரத்தில்... அதிபர் டிரம்ப் தெறிக்கவிட்ட 'ரொமான்ஸ்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அழகான பெண்களை முத்தமிடுவேன் என்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரசார கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியா டிரம்புக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், அடுத்தடுத்த பரிசோதனைகளின் முடிவில் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, பிரசார பணிகளில் முழு வீச்சில் டிரம்ப் இறங்கியுள்ளார். இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டோ சான்போர்டில், பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச தொடங்கினார்.
அவர் பேசும்பொழுது, "இன்று முதல் 22 நாட்களில் தேர்தலை வெற்றி கொள்ள போகிறோம். வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறோம்.
நான் வலிமை பெற்றவனாக உணர்கிறேன். பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் நடந்து செல்வேன். நான் அங்கு சென்று கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன். ஆடவரையும், அழகான பெண்களையும் மற்றும் ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன்" என கூறினார்.
மேலும், "நான் ஒன்றும் வயது முதிர்ந்தவன் கிடையாது. நான் இளமையானவன். நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன்" என டிரம்ப் கூறியது கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது.
இந்த வாரத்தில் பென்சில்வேனியா, அயோவா, வடக்கு கரோலினா மற்றும் விஸ்கான்சின் பகுதிகளில் நடைபெற இருக்கிற நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

மற்ற செய்திகள்
