'உலகில் யாரிடமும் இல்லாத ரகசிய அணு ஆயுதம்'!.. வயிற்றில் புளியை கரைக்கும் டிரம்ப்-இன் அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப்போன உலக நாடுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் யாரிடமும் இல்லாத ரகசிய அணு ஆயுதம் உருவாக்கி உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமை பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா தொற்று நோயை கையாண்ட விதம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் பாப் உட்வர்ட், 'Rage' என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகம் வருகிற 15 ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தில் இருக்கும் சில தகவல்களை சி.என்.என் செய்தி வெளியிட்டு உள்ளது.
உட்வார்டின் வரவிருக்கும் புத்தகம் அமெரிக்காவில் தொற்றுநோயை டிரம்ப் கையாண்டது பற்றிய மதிப்பீடு மட்டுமல்ல, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸிடமிருந்து அவரது நடத்தை மற்றும் டிசம்பர் 2019 முதல் ஜூலை 2020 வரை டிரம்பிற்கும் உட்வார்ட்டுக்கும் இடையிலான 18-ஆன்-ரெக்கார்ட் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
பாப் உட்வர்ட்டிடம் டிரம்ப் பேசும் போது, "நான் ஒரு அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னர் இந்த நாட்டில் யாரும் இல்லாத ஆயுத அமைப்பு."
ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி அவர்கள் கூட இதற்கு முன்னர் கேள்விப்படாத "பொருள்" அமெரிக்காவில் உள்ளது. எங்களிடம் இருப்பது நம்பமுடியாதது என கூறி உள்ளார்.
அந்த ஆயுதம் பிப்ரவரி 2018 இல் அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்துடன் சேர்க்கப்பட்டது. மேலும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட அதிக ஆற்றலை கொண்டது.
இதற்கிடையே, 2021 ஆம் ஆண்டில் வழங்கப்பட இருக்கும் உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
