அமெரிக்காவில் பரபரப்பு!.. அதிபர் டிரம்புக்கு அனுப்பப்பட்ட 'விஷம்' தடவிய கடிதம்!.. வெள்ளை மாளிகையை அதிரவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 'ரைசின்' என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
'ரைசின்' என்ற நச்சுப்பொருளானது, பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்ற வேதியியல் பொருட்களில் ஒன்றாகும். இந்த நச்சுப்பொருள் மனித உடலின் கண், தோல் போன்ற பகுதிகளில் படும்போது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும், இயல்பான ரத்த ஓட்ட அமைப்பை சிதைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.