தம்பி வண்டிய நிப்பாட்டு.. ரோட்டோரம் விறுவிறுன்னு கடைக்குள்ள போன ஜோ பிடன்.. 'என்னா டேஸ்டு'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா : அதிபர் ஜோ பிடன் திடீரென காரை நிறுத்த சொல்லிய நிலையில், அதன் பிறகு செய்த சம்பவம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் அதிபராக ஜோ பிடன் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தனக்கு முன் அதிபராக இருந்த டிரம்ப்பை வீழ்த்தி, அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார்.
அதிக மக்கள் செல்வாக்குடன் ஆட்சி அமைத்த ஜோ பிடன், அதிபராகி ஒரு ஆண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், அவரது ஆட்சிக்கு பல தரப்பிலான கருத்துக்களையும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பேரிடர் காலத்திலும், அவர் எடுத்த முன்னேற்பாடுகள் அதிகம் பாராட்டுகளைப் பெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள பாராக்ஸ் வீதியில், காரில் சென்று கொண்டிருந்துள்ளார் ஜோ பிடன்.
காரை நிறுத்து
அப்போது, திடீரென தனது காரை நிறுத்தும் படி, டிரைவரிடம் கூறியுள்ளார். உடனடியாக டிரைவரும் காரை நிறுத்தவே, அதில் இருந்து இறங்கிய ஜோ பிடன், அங்கிருந்த ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றிற்குள் நுழைந்து, அங்குள்ள ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
கையில் ஐஸ் க்ரீம்
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியே வந்த ஜோ பிடன், கையில் இரண்டு ஸ்கூப்புடன் கூடிய கோன் ஐஸ் க்ரீமுடன் வெளியே வந்தவர், ஜாலியாக சாலையின் ஓரம் நின்று சுவைக்கத் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபரான ஜோ பிடன், மிகப் பெரிய ஐஸ் க்ரீம் பிரியர் ஆவார்.
ஐஸ் க்ரீம் பிரியர்
அடிக்கடி அவர் பொது இடங்களில் ஐஸ் க்ரீம் சாப்பிடும் நிகழ்வுகள், அதிக அளவில் வைரலாகும். அதே போல, தற்போதும் அவர் சாலையோரம் நின்று ஐஸ் க்ரீம் குடித்த புகைப்படம், அதிகம் வைரலாகி வருகிறது. வயது ஆன பிறகும், குழந்தை போல ஐஸ் க்ரீமை சுவைக்கிறார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
