ஹெச்1பி விசாவுக்குக் கடும் கட்டுப்பாடுகள்… பைடன் அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெச்1பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணி வாய்ப்பு கிடைப்பது இனி வரும் காலங்களில் கடினமாக இருக்கப் போகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ஹெச்1பி விசா தொடர்பாக பல புதிய கட்டுப்பாடுகள் உடன் மசோதக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.
![H1B visa process to get more stricter, new bill passed H1B visa process to get more stricter, new bill passed](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/photo-h1b-visa-process-to-get-more-stricter-new-bill-passed.jpg)
ஹெச்1பி விசா மூலம் சர்வதேச அளவில் அதிகம் பயன் அடைந்தவர்கள் நம் இந்தியர்களாகத் தான் இருப்பர். இன்றும் பல இந்திய டெக் பணியாளர்களுக்கு ஹெச்1பி விசா மூலமான அமெரிக்க வேலை என்பது முக்கிய லட்சியங்களுள் ஒன்றாகவே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் பதவி ஏற்றத்தில் இருந்து முந்தைய ட்ரம்ப் அரசாங்கம் கொண்டு வந்த பல நடைமுறைகளும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் ஹெச்1பி விசா நடைமுறைகளிலும் பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உள்ளது அமெரிக்க அரசு. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் Tech workforce விதி 2021 என்ற மசோதாவில் Optional Pratical Training (OPT) என்னும் திட்டத்தையே தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பல டெக் நிறுவனங்களும் பல சலுகைகளை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனவாம்.
குறிப்பாக, வரிச்சலுகை மட்டுமல்லாது குறைவான சம்பளத்தில் பணியாளர்களை அமர்த்துவது போன்ற செயல்களிலும் பெரும் நிறுவனங்கள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஹெச்1பி விசா வழங்கப்படுவதற்கான ஆண்டு வருமாணம் அளவீட்டை ஒரு அமெரிக்கரின் வருமான அளவை வைத்து நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபோக, ஹெச்1பி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஹெச்1பி விசா மூலம் பல வெளிநாட்டவர்களை குறைவான சம்பளத்துக்குப் பணியமர்த்தி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை என நாடாளுமன்ரத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)