இவங்களுக்கெல்லாம் ‘NO’ இன்டர்வியூ.. ஒமைக்ரான் பரவலால் ‘H-1B’ விசா வழக்குவதில் தளர்வு.. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒமைக்ரான் பரவலால் எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்க அரசு தளர்வை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தற்காலிகமாக தங்கி பணி புரிவதற்காக H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோருக்கும் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாக்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
ஆனால் தற்போது அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் H-1B விசா வழங்குவதில் அமெரிக்க அரசு தளர்வை அறிவித்துள்ளது. அதன்படி இந்த விசாக்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு நேர்காணல் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மாணவர்களுக்கான விசா, தற்காலிக விவசாயம் அல்லது ஊழியர்கள், தடகளம், கலைஞர்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணல் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் விசா காலாவதியான 48 மாதங்களுக்குள், விசா விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணலை தள்ளுபடி செய்ததற்கான அங்கீகாரத்தை காலவரையின்றி நீட்டித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
