பாலத்தை இடிச்சிடுங்க.. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்காக நெதர்லாந்து அரசு எடுத்துள்ள முடிவு.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 03, 2022 09:54 PM

நெதர்லாந்து: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் படகு ஒன்றிர்க்காக நெதர்லாந்தில் இருக்கும் ஒரு பாலத்தை இடிக்க  அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

demolish Netherlands Bridge for Amazon founder Jeff Bezos

நெதர்லாந்து அரசு செய்திருக்கும் செயல்:

அமெரிக்க பெரும் பணக்காரர்களின் ஒருவருமான, பிரபல அமேசான் நிறுவத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸுக்கு நெதர்லாந்து அரசு செய்திருக்கும் செயல் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சுமார் 1994 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இயங்கும் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நூல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அப்போது தான் முதன்முதலில் அமேசான் டாட் காம் என்னும் இணைய அங்காடியை தொடங்கினார். தற்போது  உபயோகிக்காதவர்கள் யாரும் இல்லை.

பிரமாண்டமான படகு:

இந்நிலையில், பெசோஸிக்கு சொந்தமான சுமார் 430 மில்லியன் யூரோ ($485 மில்லியன்) மதிப்புள்ள பிரமாண்டமான படகு ஒன்று உள்ளது. இந்த படகு கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் நெதர்லாந்தில் இருக்கும் ரோட்டர்டாமர்ஸ் டி ஹெஃப் பாலத்தை கடந்து தான் செல்லவேண்டும்.

கோனிங்ஷேவன் பாலம் சுமார் 1878 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி பாதி முடிந்த தருவாரியில், இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளால் குண்டுவீசித் தாக்கப்பட்து. அதன் பின் மீண்டும் மக்கள் சேவைக்காக அந்த பாலம் மீண்டும் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பலத்தை தாண்டி தான் அந்த படகு செல்லவேண்டும்.

உள்ளூர்வாசிகள் ஒத்துக்கொள்ளவில்லை:

ஆனால், அந்த பாலத்தின் உயரம் படகின் உயரத்தை விட சிறியது. அந்த பாலத்தை உடைத்தால் மட்டுமே படகு செல்ல முடியும். ஆனால், இதற்கு உள்ளூர்வாசிகள் ஒத்துக்கொள்ளவில்லை. தற்போது மேயர் அலுவலகம் படகு கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார நன்மைகள் மற்றும் வேலைகளை வலியுறுத்தி அந்த பாலத்தை இடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், 40-மீட்டர் (130-அடி) உயரமான படகுக்கு செல்ல அதற்கான பாலத்தின் பகுதி மட்டுமே அகற்றப்படும் எனவும், அதற்கு ஆகும் செலவையம், மறுசீரமைக்க ஆகும் செலவையும் அமேசான் நிறுவனர் பெசோஸ் பார்த்துகொள்ளவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை சீரமைக்க சில வாரங்கள் எடுக்கும் என டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags : #NETHERLANDS #BRIDGE #AMAZON #JEFF BEZOS #நெதர்லாந்து #அமேசான் #பாலம் #ஜெப் பெரோஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Demolish Netherlands Bridge for Amazon founder Jeff Bezos | World News.