பிரியங்கா சோப்ரா-வின் கணவர் அமெரிக்க அதிபர் உடன் செய்யும் லூட்டியைப் பாருங்க..!



முகப்பு > செய்திகள் > உலகம்

By Rahini Aathma Vendi M | Dec 20, 2021 07:03 PM

நடிகை பிரியங்கா சோப்ரா-வின் கணவர் நிக் ஜோனஸ் மிகவும் பிரபலமான அமெரிக்க பாடகர் ஆவார். நிக் ஜோனஸ் தனது சகோதரர்கள் கெவின் ஜோனஸ் மற்றும் ஜோ ஜோனஸ் உடன் இணைந்து பல பிரபல இசை ஆல்பங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறார்கள்.

viral video of Jonas Brothers with US president

தற்போது ஜோனஸ் சகோதரர்களின் வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு பிரபலமான ஆடியோ ஒன்றுக்கு வாய் அசைத்து ஜோனஸ் சகோதரர்கள் மூவரும் விளையாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வீடியோ பதிவு செய்யப்படும் இடம் மிகவும் பிரம்மாண்டதாக இருக்கிறது.

அந்த வீடியோவில் எடுத்ததும் நிக் ஜோனஸ் தனது 2 சகோதரர்களிடமும் ‘தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா?’ எனக் கேட்கிறார். அதற்கு அவர்களும், “யெஸ் சார்” என பதில் அளிக்க அந்த வீடியோ நகர்கிறது. வீடியோ முடியும் தருவாயில், கெவின் ஜோனஸ், “என்ன வீடியோ சரியாக வந்திருக்கிறதா?” என்பது போல் கேட்கிறார்.

viral video of Jonas Brothers with US president

பதிலுக்கு செல்போன் மெதுவாக கீழே இறங்க, கேமரா மேன் ஆக அங்கே நின்று இருந்தவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்த வீடியோவை நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிபர் ஜோ பைடனையும் ‘டேக்’ செய்துள்ளார். அதற்கு அதிபரும், “வந்ததற்கு நன்றி” என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோவை ஜோனஸ் சகோதரர்கள் உடன் இணைந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags : #CORONA #PRIYANKA CHOPRA #JONAS BROTHERS #US PRESIDENT JOEBIDEN #ஜோ பைடன் #பிரியங்கா சோப்ரா #ஜோனஸ்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Viral video of Jonas Brothers with US president | World News.