எங்க ஆபிசுக்கு வந்து 'முகத்த' மட்டும் காட்டுங்க...! வீட்டுக்கு போறப்போ உங்க கையில '1.5 கோடி' ரூபாய் இருக்கும்...! - ஆனா அதுக்கு ரெண்டே ரெண்டு கட்டுப்பாடுகள் தான்...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்முகத்தை காட்டுபவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். வேடிக்கையாக தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே முகத்தை காட்டுபவர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாய் வழங்குகிறது ஒரு பிரபல நிறுவனம்.

அமெரிக்காவில் நியூ யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் தான் புரோமோபாட். இந்த நிறுவனம் ரோபோ உற்பத்தி தொழில் செய்து வருகிறது. தற்போது புது வகையான ரோபோக்களை வடிவமைக்க புரோமோபாட் திட்டம் போட்டுள்ளது.
குறிப்பாக, மனித முகங்களை கொண்ட ரோபோக்களை வடிவமைக்க புரோமோபாட் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கணினி மூலம் முகங்களை வடிவமைப்பதற்கு பதிலாக, உண்மையான மனிதர்களின் முகங்களை பயன்படுத்த புரோமோபாட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, தங்கள் முகத்துக்கான உரிமைகளை வழங்கும் நபர்களுக்கு இந்திய மதிப்பில் 1.50 கோடி ரூபாய் வழங்கப்படும் என புரோமோபாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறம், பாலினம் என எந்த வேறுபாடுகளும் பாராமல் முகங்கள் தேர்வு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகத்தை காட்டுவதற்கு குறைந்தபட்சமாக 25 வயதை தொட்டவராக இருக்க வேண்டும். முரட்டு தனமாக இல்லாமல் நட்பான, அன்பான மற்றும் கனிவான தோற்றம் இருக்கும் முகம் வேண்டும். இந்த அம்சங்கள் இருப்பின் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முகம் தேர்வு செய்யப்படுபவர்கள் 1.50 கோடி ரூபாய் பெற்று பணக்காரர் ஆவது உறுதி.

மற்ற செய்திகள்
