'அணு ஆயுதத்தை கையும் கணக்கும் இல்லாம தயாரிச்சிட்டே இருக்காங்க...' 'அவங்கள' குறைச்சு மதிப்பிட கூடாது...! 'இன்னும் ஆறு வருஷத்துல...; - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட பென்டகன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் பென்டகன் நிறுவனம், உலக நாடுகள் நினைப்பதை விட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை பெருக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

உலகம் முழுவதும் அணு ஆயுதப்பொருட்கள் உற்பத்தியை குறைக்க வேண்டும் என ஐ.நா அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் சீனா அதை காதில் கூட வாங்குவது இல்லை.
ஒருபுறம் சீனா என்றால் மறுபுறம் வடகொரியா. பல முறை ஐ.நா அமைப்பால் எச்சரித்தும் வடக்கொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
தற்போது அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் உலக நாடுகள் நினைத்து கொண்டிருப்பதை விட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தி குறித்து வந்த ஆய்வறிக்கையில், 'ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
இப்போது இருக்கும் சீன அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்குள் 700-க்கும் மேலே அதிகரிக்கலாம் எனவும், 2030-க்குள் அவை 1000-ஆக கூட உயர கண்டிப்பாக வாய்ப்புள்ளது' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
