சுற்றி வளைத்த தாலிபான்கள்!.. தப்புவதற்காக அசுர வேகத்தில் பறந்த ஆப்கான் விமானப்படை!.. கண்ண மூடி தொறந்து பார்த்தா... 'அய்யோ'!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் விமானப்படையில் பணியாற்றிய விமானப் படை விமானிகள் சிலர் தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தஜிகிஸ்தானில் சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு தாலிபான்களிடம் வீழ்ந்த அந்த இரவு, ஒரு கூட்டம் ஆப்கான் விமானப்படை விமானிகள் விமான தளத்தில் இருந்திருக்கிறார்கள்.
கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லாததால், தங்களை தாலிபான்கள் கொன்றுவிடுவார்கள் என்ற நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் திகிலுடன் இருந்திருக்கிறார்கள்.
12 விமானிகளும் ஒரு விமான ஊழியருமாக விமானம் ஒன்றில் ஏறி, ஆப்கானிஸ்தானை விட்டு உயிர் தப்ப பறந்திருக்கிறார்கள்.
"நாங்கள் தாலிபான்களைக் கொன்றிருக்கிறோம். அவர்களிடம் நாங்கள் சிக்கினால் நிச்சயம் எங்களையும் கொன்றுவிடுவார்கள்" என்று கூறும் அவர்களில் ஒருவர், தாங்கள் தஜிகிஸ்தான் நாட்டில் சென்று இறங்கியதாக தெரிவிக்கிறார்.
அங்கே அவர்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும், ஒருவர் கூட தங்கள் சீருடையைக் கழற்றவில்லை. ஏனெனில், ரஷ்யாவின் உத்தரவின் பேரிலோ அல்லது புதிய காபூல் அரசுக்கு தாங்களும் ஆதரவு என்று காட்டுவதற்காகவோ எந்த நேரத்திலும் தாங்கள் தாலிபான்களிடம் தஜிகிஸ்தானால் ஒப்படைக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் இருக்கிறார்கள்.
மேலும், அவர்களில் சிலர் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்கள். எனினும், அவர்கள் அமெரிக்காவிடம் உதவி கோரவில்லை. காரணம், ஆப்கன் இராணுவம் சண்டை போட முயற்சிக்காமலேயே தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டது என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
எனவே, தாங்கள் கனடாவுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ள அவர்கள், கனடா அரசு தங்களுக்கு உதவவேண்டும் என்றும், தங்களை தஜிகிஸ்தானிலிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்லவேண்டும் என்றும் கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.