அப்பாவோட தாலிபான்கள் 'டீ' குடிச்சிட்டு இருந்தாங்க...! 'குடிச்சு முடிச்ச உடனே தரதரவென இழுத்திட்டு போய்...' - பிரபல 'நாட்டுப்புற' பாடகருக்கு நடந்த கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் பிரபல நாட்டுப்புற பாடகரை வீட்டில் இருந்து வெளியே தரதரவென இழுத்து வந்து நடுரோட்டில் வைத்து தாலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் தன்னுடைய வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தாலிபான்கள் அவரை வீட்டிற்குள் இருந்து வெளியே தரதரவென இழுத்துக் கொண்டுப்போய் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அவரது மகன் உறுதி செய்துள்ளார். இந்த கொடுரத்தை நிகழ்த்துவதற்கு முன்பாக தாலிபான்கள் அந்தராபியுடன் சேர்ந்து தேனீர் அருந்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், 'இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படும். கொலை தொடர்பாக தற்போது வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை' என கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை என தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இசைக்கு இங்கு தடை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அடிப்படைவாதிகள் கலைஞர்களை தேடி சென்று கொல்வது உலக வரலாற்றில் இது முதன்முறையல்ல!

மற்ற செய்திகள்
