'என்னடா இங்க இவ்ளோ பொட்டி இருக்கு'?.. 'அமெரிக்காகாரன் எதையோ விட்டுட்டு போய்ட்டான்ணே'!.. 'ஓபன் பண்ணா... தாலிபான்கள் செம்ம ஷாக்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்க சரியான முறையில் தனது ராணுவ அமைப்புகளை கைவிடாததால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நவீன ராணுவ தளவாடங்களை ஆப்கனில் அப்படியே விட்டு அமெரிக்க ராணுவம் தாயகம் திரும்பும் நிலையில், அவற்றை தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் ஜிஹாதி அமைப்புகளான ஹக்கானி போன்ற பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்து அதிர்ச்சி பின்னணி தெரியவந்துள்ளது.
ஏகே 47 துப்பாக்கிகள், இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்த உதவும் நைட் விஷன் கருவிகள் உள்ளிட்ட பல நவீன ஆயுதங்கள் ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ தொய்பா உள்ளிட்டவற்றுக்கு கிடைத்தால், காஷ்மீரை குறிவைத்து அவர்கள் நடத்தும் தாக்குதல் அதிகரிக்க கூடும்.
அமெரிக்கர்கள் விட்டுச் செல்லும் Blackhawk ஹெலிகாப்டர்கள், அனைத்து விதமான தளங்களிலும் இயங்கும் ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை வைத்து தீவிரவாதிகள் இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது.
எனவே, அது போன்ற நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள கடலோர காவல் படையும், விமானப்படையும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இல்லாத நிலையில், இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்படவிருக்கும் தாக்கம் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து முப்படை தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இந்த வாரம் மத்திய அரசிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.