'காபூலை தரைமட்டமாக்க... வெறிபிடித்து அலையும் தீவிரவாதிகள்'!.. 'யாராலும் தடுக்க முடியாது' என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் விமான நிலையத்தில் வெடித்த சக்தி வாய்ந்த குண்டுகளின் சத்தம் அடுங்குவதற்குள் அடுத்த அபாய மணி அடித்துவிட்டது.
காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ்-கே (ISIS-K) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், காபூல் விமான நிலையத்தில் நிலைமை தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவத் தளபதிகளிடம் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
இதுவே இறுதித் தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தான், காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
மேலும், தற்கொலைப்படை தாக்குதல் போன்று மீண்டும் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடக்கும் என அமெரிக்க இராணுவத் தளபதிகள் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாக, காபூல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களும் உடனடியாக விமான நிலையப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.