'இன்னும் கொஞ்ச நேரத்துல பாம் வெடிச்சிடும்'!.. 'இறுதி நொடியில் கனடா எடுத்த அவசர முடிவு'!.. இனி காபூலில் 'அவங்க' நிலைமை அவ்ளோ தான்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து கனடியர்கள் மற்றும் ஆப்கன் மக்கள் தொடர்ச்சியாக வெளியேறி வரும் சூழலில், கனடா அரசாங்கம் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இதுவரை 3,700 மக்களை கனடா அரசாங்கம் மீட்டுள்ளது. எனினும், ஆப்கானிஸ்தானில் கனடிய மக்கள் இன்னும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், காபூல் விமான நிலையம் அருகாமையில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சில மணி நேரம் முன்னர், அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியை முடித்துக் கொள்வதாக கனடா அரசாங்கம் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், கனடா நிர்வாகம் காபூலில் இருந்து வெளியேற்றும் பணியை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும், எத்தனை கனடியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர் என்ற உறுதியான தகவல் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் முடிவுக்கு வந்துவிடவில்லை எனவும், அங்குள்ள தற்போதைய சூழல் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும், நேச நாடுகளுடன் இணைந்து எதிர்வரும் நாட்களில், ஆப்கானில் சிக்கியுள்ள, எஞ்சிய கனடியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 20,000 ஆப்கன் மக்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க உறுதி அளித்துள்ளார். இதுவரை ஆப்கானிய மக்களிடம் இருந்து 2,500 குடியுரிமை விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாகவும், இது 8,000 மக்களுக்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கனடா நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் 39.6 மில்லியன் டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் செலவிட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்
