'நான் சொல்றத கவனமா கேளுங்க!'.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் வீடியோ!.. காபூல் தாக்குதலில் திடீர் திருப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (26.8.2021) விமான நிலையம் அருகே அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதலில், இதுவரை 103 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட காபூல் நகரில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பானது, தாக்குதலில் ஈடுபட்டவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை கொதிப்படையச் செய்துள்ள இந்த தாக்குதலை நடத்திய நபர் Abdul Rehman Al-Loghri என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுத்து வரும் அமெரிக்க ராணுவத்துக்கு அருகே 5 மீட்டர்கள் வரையில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலால் நெருங்க முடிந்தது என ஐ.எஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரபிக் மொழியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்த வெடிகுண்டு தாக்குதலில் 150 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், குறைந்தது 90 ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி முனையில் தாலிபான்கள் ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் படைகளால் மூலம் எப்படியாவது வெளியேறிவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த 12 நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
