'ஜன்னலை உடைத்து... வீட்டுக்குள் விழுந்து வெடித்த ஏவுகணை'!.. காபூலில் தீவிரவாதிகளின் 'அடுத்த' பயங்கர ஸ்கெட்ச்!
முகப்பு > செய்திகள் > உலகம்கண் இமைக்கும் நேரத்தில் காபூல் விமான நிலையத்தை கூறு போட தீவிரவாதிகள் திட்டமிட்டு அடுத்தடுத்து திடீர் தாக்குதல்கள் நடத்துவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காபூல் விமான நிலையம் மீது அடுத்தடுத்து 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கபர்கானே லேப் பகுதியில் இருந்து காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியது. எனினும், ஏவுகணைகள் விமான நிலையத்தில் பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்த ராக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை. எனினும், அந்த முயற்சியை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், காபூல் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
