மார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள்... சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிக்கு கொரோனா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 10, 2020 11:57 AM

சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு (Phoenix mall) சென்ற தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

couple who visited phoenix mall tested positive for covid19

கொரோனா கொள்ளை நோய் தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஃபீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்றவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஃபீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மருத்துவ பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என மாநகராட்சி ஆணையர் தெளிவுபடுத்தினார். இந்நிலையில், தற்போது வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்ற ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதில் இந்த இருவரும் அடங்குவர் என்பது குறிப்படத்தக்கது.