‘ஆர்சானிக் ஆல்பம் 30 சி’ மருந்து... 'கொரோனாவை' கட்டுப்படுத்தும் என 'நம்பிக்கை...' 'ஓமியோபதி' மருத்துவர்கள் 'பரிந்துரை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஓமியோபதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ஆர்சானிக் ஆல்பம் 30 சி’ மருந்தை மக்களுக்கு வழங்க அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பயனளிக்கக் கூடிய மருந்துகளை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் என்ற பல்வேறு மூலிகைகள் அடங்கிய கலவையை குடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இது தொண்டையில் சளி, கபம் போன்றவை கட்டாமலும், சளி உறைந்து போகாமலும் தடுக்கும் என்றும் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் இந்த கபசுர குடிநீர் வழங்குவதாக கூறப்படுகிறது.
எதிர்விளைவுகள் அற்ற இந்த மருந்தை தற்போது மக்களுக்கு சித்தமருத்துவமனைகள் வழங்கி வருகின்றன. அவற்றை குடித்து மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்சானிக் ஆல்பம் 30 சி (arsenicum album 30C) என்ற மருந்தை தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த மருந்தை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேலை 2 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மாதம் கழித்து அறிகுறிகளின் நிலையை பொருத்து மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கொரோனா அறிகுறிகள் என்று கூறப்படும் சளி, இரும்பல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
எப்படி பாம்பு கடிக்கு பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறதோ. அதேபோல், இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம், கொரோனா கிருமியை எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமியோபதி மருத்துவம் சமீபகாலமாக டெங்கு, பறவைகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்து அவற்றை ஒழிக்க உதவியாக இருந்தது. இதனை அரசுகளும் ஏற்றுகொண்டது. அதேபோல் இந்தமருந்துக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 40 ரூபாய்க்குள் அடங்கிவிடும் இந்த மருந்து மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவர் கூறினார்.
கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இந்த மருத்துவம் ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஞானசம்பந்தம், தமிழகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கும் இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்துபார்க்க அனுமதிக்க வேண்டும் என் கேட்டுக் கொண்டார்..