'நள்ளிரவில்' முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து... 101 வயது பாட்டி பார்த்த வேலை... 'நொந்து' போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > உலகம்மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக, முதியோர் இல்லத்தில் இருந்து 101 வயது பாட்டி தப்பித்த சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.

கொரோனா காரணமாக ஜெர்மனி நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அங்குள்ள புரூன்ஸ்விர்க் நகரத்தை சேர்ந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 101 வயது பாட்டிக்கு திடீரென ஒரு ஆசை ஏற்பட்டது. அதாவது தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது தான் அது.
இதை வெளியில் சொன்னால் விடமாட்டார்கள் என்று எண்ணி நள்ளிரவில் ரகசியமாக முதியோர் இல்லத்தில் இருந்து அந்த பாட்டி தப்பித்து இருக்கிறார். ஆனால் மகள் வசிப்பது புறநகர் பகுதி என்பதால் அங்கு செல்லும் வழியை அவர் மறந்து விட்டார். ரோட்டில் பாட்டி சுற்றித்திரிந்ததை பார்த்த ரோந்து போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். பதிலுக்கு பாட்டி உண்மையை மறைத்து மகள் வீட்டில் வசிப்பதாகவும் வழிமாறி வந்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை அவரது மகள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது மகள் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முதியோர் இல்லத்தில் இருந்து பாட்டி தப்பித்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டார். இதையடுத்து மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய பாட்டியை மீண்டும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்ற போலீசார், ஊரடங்கு நேரத்தில் இதுபோல மீண்டும் இப்படி செய்யாதீர்கள் என்று அவருக்கு அட்வைஸ் செய்து திரும்பி இருக்கின்றனர்.
