'திடீர்னு காணாமல் போய்ட்டார்...' 'மரக்கிளையில் தூக்குப்போட்டு மண்டியிட்ட நிலையில்...' இளம் வீரர் எடுத்த அதிர்ச்சி முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இளம் வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் ராணுவப் பயிற்சி மையம் உள்ளது. இந்த ராணுவப் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த தகுதியுள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சிறந்த வீரர்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த முகாமில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியில் இணைந்த பயிற்சி வீரர் ஒருவர் நேற்று மாலை திடீரென காணாமல் போயுள்ளார். அவரை முகாம் அலுவலர்கள் தேடி வந்துள்ளனர். இன்று காலையும் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் முகாமை விட்டு சற்று தொலைவில் உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்கிலிட்டு மண்டியிட்ட நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் இறந்த பயிற்சி வீரர் மதுரையைச் சேர்ந்த சம்பத்குமார் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த ஆண்டு இறுதியில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மதுரையில் வசிக்கும் இவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பத் குமாரின் இறப்பிற்கான காரணம் குறித்து வெலிங்டன் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
