கொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 20, 2020 03:14 PM

உலகம் முழுவதும் கொரோனா தலைவிரித்து ஆடினாலும் கூட அதனையும் திறமையாக பல நாடுகள் கையாண்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்த நிலையில் கொரோனா காலத்திலும் பாதுகாப்பான நாடுகள் எவை? என்பது குறித்த புதிய பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

COVID-19: Safest countries in world for crisis revealed

ஹாங்ஹாங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பாதுகாப்பான நாடுகள் குறித்த பட்டியலை  வெளியிட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட செயல்திறன், அரசாங்க மேலாண்மை திறன், கண்காணிப்பு மற்றும் கண்டறிதல், அவசர சிகிச்சை தயார்நிலை போன்றவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் இஸ்ரேல் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ஜெர்மனியும், 3-வது இடத்தை தென் கொரியாவும் பெற்றுள்ளது. அரசாங்க நிர்வாக செயல்திறனுக்காக அதிக மதிப்பெண்கள் பெற்றது மட்டுமின்றி மொத்த மதிப்பெண்களாக 632.32 இஸ்ரேல் நாடு பெற்றுள்ளது. இஸ்ரேலுக்கு அடுத்த இடத்தில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி உள்ளது. பட்டியலில் முதலிடத்தை இஸ்ரேல் பிடித்திருந்தாலும் அவசர சிகிச்சை தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் கண்டறிதலுக்காக ஜெர்மனி, இஸ்ரேலை விட அதிக மதிப்பெண் பெற்று உள்ளது.

பிற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடினாலும் ஜெர்மனியில் அதிக பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தவில்லை. இதற்கு அந்நாட்டின் துரித நடவடிக்கைகளே காரணமாகும். இதனால் உலக அளவில் மட்டுமின்றி, ஐரோப்பாவிலும் மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது. கொரோனா முதலில் தோன்றிய சீனாவுக்கு இந்த பட்டியலில் 5-வது இடம் கிடைத்துள்ளது . அதே நேரம் மொத்தம் 40 நாடுகள் இடம்பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்தவொரு இடமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக பாதுகாப்பான 40 நாடுகள்:-

1. இஸ்ரேல்

2. ஜெர்மனி

3. தென் கொரியா

4. ஆஸ்திரேலியா

5. சீனா

6. நியூசிலாந்து

7. தைவான்

8. சிங்கப்பூர்

9. ஜப்பான்

10. ஹாங்ஹாங்

11.சுவிட்சர்லாந்து

12.ஆஸ்திரியா

13. கனடா

14.ஹங்கேரி

15. டென்மார்க்

16. நெதர்லாந்து

17. நார்வே

18. யூஏஈ

19. பெல்ஜியம்

20. வியட்நாம்

21. தாய்லாந்து

22. பின்லாந்து

23. லூக்சிமோபெர்க்

24.குவைத்

25. செச்சியா

26.மொனாக்கோ

27. கத்தார்

28. லிச்சென்ஸ்டெயின்

29. சிப்ரஸ்

30. கிரீஸ்

31. எஸ்டோனியா

32. மலேசியா

33. போலந்து

34. அயர்லாந்து

35. குரோட்டியா

36. துருக்கி

37. ஓமன்

38. ஸ்லோவேகியா

39. லத்தியா

40. ஸ்லோவேனியா