எது நடக்க கூடாதுன்னு நெனச்சமோ 'அது' நடந்துடுச்சு...! 'ஓமிக்ரான் வைரஸின் முதல் பலி...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Dec 13, 2021 06:28 PM

பிரிட்டனில் கடந்த வாரம் வரையிலும் ஆயிரத்து 898 பேருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Britain man is the first person died on omicron virus

பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவில்லை என்றால் ஒமிக்ரான் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் மற்றும் டிராபிகல் மெடிசனை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளிலிருந்து பணி செய்வது, முகக்கவசம் அணிவதை அதிகரிப்பது, சில பொது இடங்களுக்கு கோவிட் அனுமதி சீட்டுகளை கொண்டுவருவது போன்ற திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டனில் புதியதாக 54 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதில், 633 பேருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.

Britain man is the first person died on omicron virus

முன்னதாக இரு டோஸ் தடுப்பு மருந்து மட்டுமே உங்களை ஓமிக்ரான் திரிபிலிருந்து பாதுகாக்காது என பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.

பிரிட்டனில் ஓமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டெல்டா திரிபால் பாதிப்பட்டவர்களை ஆராய்ந்ததில் இந்த புதிய திரிபை தடுப்பு மருந்துகள் வீரியமாக தடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பு மருந்துக்கு பிறகு மூன்றாவதாக பூஸ்டர் போட்டுக் கொள்வது 75 சதவீத மக்களுக்கு கோவிட் அறிகுறிகள் வராமல் தடுக்கிறது.

இந்த நிலையில் பிரிட்டனில் ஓமிக்ரான் பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதன்முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #OMICRON SYMPTOMS #OMICRON #ஒமிக்ரான் #பிரிட்டன் #பலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Britain man is the first person died on omicron virus | World News.