அந்த வழியா யாரு போனாலும்.. கெட்ட வார்த்தையால திட்டுற ஒரு பெண் குரல் கேக்குது.. அதே இடத்துல 233 வருஷம் முன்னாடி நடந்த ஒரு சம்பவம்.. அச்சத்தில் மக்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: இங்கிலாந்தில் ஒரே இடத்தில் இரு வெவ்வேறு வகையான ஆவிகளை சந்தித்ததாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வொர்க் ஃப்ரம் ஹோம்ல கோடீஸ்வரன் ஆயிட்டேன்.. இது எப்படி சாத்தியமாச்சுன்னா.. அனுபவத்தை பகிர்ந்த இளைஞர்
பொதுவாக ஆவிகள், பேய், பில்லி சூனிய கதைகள் எல்லாம் அனைத்து நாடுகளிலும் சொல்லப்படும். என்னெவென்றால் அந்தந்த ஊர் கலாச்சாரத்திற்கும், காலத்திற்கும் ஏற்றார் போல அதன் சம்பவங்கள் மாறும். பொதுவாக ஆவி, பேய் என்பது அனைத்துமே கட்டுக்கதைகள், பிரம்மை என அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் சில தேசங்களில் இதுபோன்ற விசித்திர கதைகளை மக்கள் கூறி வருகின்றனர்.
உடல் கண்டெடுப்பு:
அப்படி ஒரு சம்பவம் தான் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள சோமர்செட் என்ற இடத்தில், Dead Woman's Ditch என பெயர் கொண்ட இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தான் சுமார் 1789-ஆம் ஆண்டு, ஜேன் வால்ஃபோர்ட் என்ற பெண்ணை தன் கணவனான ஜான் கேனன் என்பவர் தீர்த்துக் கட்டியதாக கூறப்படுகிறது. அதோடு, அதே இடத்தில் சுமார் 1988-ஆம் ஆண்டு, ஷெர்லி என்ற பெண்ணின் உடல் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரு பெண்களின் இறப்பிற்கும் அப்பகுதி மக்கள் ஜான் கேனன் என்பவர் மீது குற்றம் சாட்டினர்.
வெண்ணிறத்தில் பழங்கால ஆடை:
தற்போது கூடுதலாக அந்த வழியாக நடந்து செல்லும் நபர்களை திடீரென எதிர்பாராத நேரத்தில், ஒரு பெண் கெட்ட வார்த்தையால் திட்டி அங்கிருந்து துரத்துவதாக பலர் தெரிவித்துள்ளார்கள். இதனை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு தாங்கள் இதனை எங்கு வேண்டுமானாலும் சொல்வோம் என கூறி வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் இந்த பெண் உருவம் வெண்ணிறத்தில் பழங்கால ஆடை அணிந்து இருப்பதாகவும், அதோடு நீளமான கருப்பு நிற கோட் அணிந்த ஒரு பெண்ணைப் பார்த்ததாக சிலரும் தெரிவித்து வருகின்றனர்.
விசாரணை:
இந்நிலையில் இந்த சம்பவம் அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்திய நிலையில், அமெரிக்க படங்களில் வருவது போல ஆவிகளை கண்டுபிடிக்கும் உள்ளூர் குழு ஒன்று உண்மையை தெரிந்து கொள்ள விசாரணையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆயிருக்கலாம்.. எனக்கு அப்படி ஒரு காசு தேவையில்ல.. நேர்மையாக உதறி தள்ளிய மனிதன்